24ல் கோவையில் ஜோதிடர்கள் ஆன்மிக மாநாடு : இந்து மக்கள் கட்சி அறிவிப்பு
கோவை : வரும் 24-ம் தேதி கோவையில் ஜோதிடர்கள் ஆன்மிக மாநாடு நடத்த இந்து மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.
கோவையை அடுத்த பேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் திருமடத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜோதிடர்கள், ஆன்மிகவாதிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் வரும் 24-ம் தேதி கோவையில் ஜோதிடர்கள் ஆன்மிக மாநாடு நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது.
இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடந்த கூட்டத்தில் பேரூர் ஆதீனம் இளையபட்டம் மருதாசல அடிகளார், காமாட்சிபுரம் ஆதீனம் அனந்தலிங்கத் தம்பிரான் சுவாமிகள், மலுமிச்சம்பட்டி பாபுஜீ சுவாமிகள், நகர்பீடம் சிவதன செல்வன் சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,
ஜோதிடக் கலையை தொழிலாக கொண்டுள்ள ஜோதிடர்களுக்கு காவல் துறை தொந்தரவு அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி வரும் 21-ம் தேதி மாவட்ட ஆட்சியர் மூலமாக தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை மனு அனுப்புவது என்று முடிவானது.
ஜோதிடக்கலையின் மகத்துவத்தை பறைசாற்றும் வகையில் பாரம்பரிய வைத்தியர் சங்கங்கள், ஆன்மிக அமைப்புகளை ஒருங்கிணைத்து இந்து மக்கள் கட்சி சார்பில் வரும் 24-ம்தேதி கோவையில் ஜோதிடர்கள் ஆன்மிகப் பேரணி மற்றும் மாநாடு நடத்துவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications