துபாயில் குழந்தைகள் தினவிழா: தமிழ்த்துளி, ரேடியோ ஹெலோ எஃப் எம் 89.5 ஏற்பாடு

இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழ்த்துளி அமைப்பினரின் குழந்தைகள் ரேடியோ ஹெலோ எஃப் எம்மின் ஹலோ மாலை நிகழ்ச்சியில் மூன்று மணி நேரம் (மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை) வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் நட்ராஜுடன் இணைந்து தொகுப்பாளர்களாக நேரடியாகப் பங்கு கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
அந்த குழந்தைகள் தாங்கள் முதன் முதலாக நிகழ்ச்சியில் பங்கு கொண்டவர்கள் போல் அல்லாமல் மிகவும் இயல்பாகப் பேசி, நிகழ்ச்சிக்கு தொலைபேசியில் பேசுபவர்களிடமும் வெகு இயல்பாக உரையாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர்.
பாடல்கள், கடி ஜோக்குகள், குண்டக்க மண்டக்க எனும் விளையாட்டு என அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு நேயர்களையும், ரேடியோ ஹெலோ எஃப் எம்மையும் மற்றும் அனைத்து தமிழ் மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
அதே நேரத்தில் ரேடியோ ஹெலோ 89.5 எஃப் எம் சார்பில் நடத்தப்பட்ட குழந்தைகளுக்கான விளையாட்டு நிகழ்ச்சியிலும் தமிழ்த்துளி அமைப்பினரின் குழந்தைகள் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் குழந்தைகள் தின விழாவைக் கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் ரேடியோ ஹெலோ எஃப் எம் சார்பாக சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.
தமிழ்த்துளி அமைப்பின் சார்பாக ரேடியோ ஹெலோ 89.5 எஃப்.எம் நிகழ்ச்சிகளில் சமீரா, முஹம்மது ரஹீல் சைய்தி, கணேஷ் ராம் குமார், அக்ஷிதா, மிதேஷ், ரிஷிமா, ஷிவானி, ஆகாஷ்ராஜ் ஆகிய குழந்தைகள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
த்தகையதொரு சிறப்பான வாய்ப்பை குழந்தைகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்த ஹெலோ எஃப் எம் 89.5 க்கு தமிழ்த்துளி அமைப்பினர் நன்றி தெரிவித்து விடைபெற்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications