விடிய, விடிய நடந்த கள்ளழகரின் தசாவதாரம்: நாளை மலைக்கு புறப்பாடு
மதுரை: நேற்று மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவார நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 2 வாரமாக நடந்து கொண்டிருக்கிறது. கடந்த 18-ம் தேதி அழகர் பச்சைப் பட்டுடுத்தி ஆற்றில் இறங்கினார்.
இதையடுத்து ஆற்றோரத்தில் உள்ள ராமராயர் மண்டகப்படி வழியாக ஒவ்வொரு திருக்கண் மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று வண்டியூர் வீரராக பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டு வைகையாற்றில் உள்ள தேனூர் மண்டபத்திற்கு கள்ளழகர் புறப்பட்டார். அங்கு கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனூர் மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நிறைவு பெற்றபின் அங்கிருந்து கள்ளழகர் புறப்பட தயாரானார். அப்போது பல்லக்கை தூக்கும் சேவந்தாங்கிகளில் ஒரு பக்கம் உள்ளவர்கள் தூக்காததனால் பல்லக்கு ஒரு புறமாக சாய்ந்தது. அதில் இருந்த பட்டரும், சாமிக்கு சாற்றப்பட்ட மாலைகளும் தரையில் விழுந்தன. இதைப் பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் கள்ளழகர் ராமராயர் மண்டகப்படிக்கு சென்றார். இரவு அங்கு தங்கிய அவர் நள்ளிரவு முதல் முத்தங்கி சேவை, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், மோகன அவதாரம் ஆகிய அவதாரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
விடிய, விடிய நடந்த இந்த தசாவதார நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு ரசித்தனர். இதற்காக இரவு நேரத்தில் சிறப்பு பேருந்துகள் விடப்பட்டன.
ராமராயர் மண்டகப்படியிலிருந்து இன்று காலை 5 மணிக்கு மோகன அவதாரத்தில் புறப்பட்டு தல்லாகுளம் பகுதியில் உள்ள சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு திருமஞ்சனமாகி நாளை (வியாழக்கிழமை) அதிகாலையில் பூப்பல்லக்கில் அழகர் மலைக்கு புறப்படுகிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications