துபாயில் ரசமாயி அமைப்பின் இந்திய சுதந்திர தின கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil

இந்த நிகழ்ச்சியின் துவக்கமாக கதீஜா பானு, ஆயிஷா பானு, நவீத் மற்றும் நதா ஆகியோர் இறைவசனங்களை ஓதினர். ரசமாயி பொதுச் செயலாளர் மனோஹர் வரவேற்புரையாற்றினார்.
இதைத் தொடர்ந்து ரசமாயி குழுவினர் தேச பக்திப் பாடலை பாடினர். துணைத்தலைவர் உமா ராணி பத்மநாபன் சிறப்புப் பேச்சாளரை அறிமுகப்படுத்தி வைத்தார்.
சையத் அஃபாக் ஹாஷிமி திருக்குர்ஆனும், நவீன அறிவியலும் எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். இணைச் செயலாளர் கேசரி திருமூர்த்தி நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜாபர் அலி, டாக்டர் பர்வீன் பானு உள்ளிட்டோர் செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications