சுவிட்சர்லாந்து நாட்டில் சைவமும் தமிழும் போட்டி

Subscribe to Oneindia Tamil

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள Gemeinschaftszentrum Chleehus, Mädergutstrasse 5, 3018 Bern என்னும் இடத்தில் இந்த ஆண்டிற்கான சைவமும் தமிழும் போட்டி வருகிற ஜூன் 25 ம் தேதி சனிக்கிழமை காலை நடைபெற உள்ளது. சைவ நெறி குறித்து இளம் தலைமுறையினர் அறிந்து கொள்வதற்காக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் தேவாரம், திருக்குறள், வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளன.

பிற்பகலில் தமிழ் மாணவர்களின் கலைநிகழ்வுடன் மங்கள இசைநிழ்ச்சியும் மாலை 18.00 மணிமுதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பும் நடைபெற உள்ளது.

சிறப்பு விருந்தினர்கள்

சிறப்பு வாய்ந்த இந்த நிகழ்ச்சியில் சர்வமதபீடத்தின் அறக்கட்டளைத் தலைவர் திருமதி கெறாதே ஹவுக் மற்றும் திட்ட இணைப்பாளர் திரு. கார்ட்முத் ஹாஸ் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். அவர்கள் ஐரோப்பாத்திடலில் அமையவிருக்கும் அருள்ஞானமிகு ஞானலிங்கேஸ்வரர் ஆலயக் கட்டுமானத் திட்டத்தின் நிலுவை நிலையினை குறித்து விளக்குவர்.

பயிலரங்கம்

சைவநெறி இந்துசமயப்பண்பாடு சமயத்தோற்றம், சன்மார்க்கம் ஆகிய கருத்துக்களையும் இந்துசமய தரவுகளையும் தகவல்களையும் முழுமையாக விளக்கும் வகையில் பயிலரங்கள் நடத்தப்படுகிறது. பயிலரங்கில் பங்கெடுக்கும் அனைவரும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. பங்கெடுக்கவிரும்புவோர் முற்கூட்டி தொடர்புகொள்ள வேண்டும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மானசரோவர் புனித தீர்த்தம்

இவ் அரங்கில் ஞானலிங்கேஸ்வரர் திருத்தொண்டர்சபை அறிமுகமும் மதிப்பளிப்பும் இடம்பெறும். மேலும் திருக்கைலாய திருயாத்திரை சென்றுவந்த அருள்ஞானமிகு ஞானலிங்கேஸ்வரர் ஆலயக்குருமார்களால் மானசரோவர்-கைலாய புனிததீர்த்தம் பிரசாதமாக மண்டபத்தில் சிவநேயர்களுக்கு வழங்கப்படும். சுவிஸ்நாட்டில் வாழும் தமிழர்கள் தங்கள் குடும்பம் சகிதமாக இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று அறக்கட்டளை நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+