உனக்குத் தரலாம் நோபல் பரிசு ….
Subscribe to Oneindia Tamil

என் பிரியமானவனே !
நெஞ்சில் நெருப்பும்
கண்ணில் காதலுமாய்
நான் காத்திருக்கையில்
கண்ணியம் காத்து
காதலை மெய்ப்பித்தாயே
அதற்குத் தரலாம் நோபல் பரிசு….
உடைகள் உரசினாலே
உள்ளத்தில் தீப்பிடிக்கும்
அந்த நெருப்பு தருணத்திலும்
சுட்டு விரலால் கூட
சுடாமல் நின்றாயே
அதற்குத் தரலாம் நோபல் பரிசு….
ஆளில்லா கானகத்தில்
அருகருகே அமர்ந்திருந்தும்
அமைதி காத்தாயே
அதற்குத் தரலாம் நோபல் பரிசு….
விழிகள் வழியே
காதலை சொல்லியும்
புரியாதது போல புன்னகைத்தாயே
அதற்கும் தரலாம் நோபல் பரிசு.












Click it and Unblock the Notifications