தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு உற்சாகக் கொண்டாட்டம்
திருச்சி: இன்று ஆடிப்பெருக்கு. இதையொட்டி தமிழகம் முழுவதும் ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் மக்கள் புனித நீராடி கொண்டாடினர்.
ஆடி மாதம் 18ம் தேதி ஆடிப் பெருக்கு தினமாக தமிழகத்தில் கொண்டாடப்படும். மங்கல நாளான இன்று புதுமணத் தம்பதிகள் தம்பதி சமேதராக புனித நீராடி தாலி மாற்றிக் கொள்வது வழக்கம். அதேபோல திருமணமாகாத பெண்கள், நல்ல கணவன் கிடைக்க வேண்டி கடவுளை வணங்குவதும் இந்த நாளில்தான்.
அந்த வகையில் இன்று ஆடிப் பெருக்கு தினம் தமிழகத்தில் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் ஆயிரக்ககணக்கானோர் கூடி அம்மா மண்டபம் பகுதியில் புனித நீராடினர்.
பெரும் திரளான இளம் தம்பதிகள் தங்களது தாலிக் கயிற்றை மாற்றி, வணங்கினர். அதேபோல திருமணமாகாத இளம் பெண்கள், நல்ல கணவர் கிடைக்க வேண்டி வணங்கி புனித நீராடினர்.
பக்தர்கள் கூட்டம் பெரும் திரளாக இருந்ததாலும், காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியதாலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதேபோல திருவையாறு, வேலூர் பரமத்தி, கும்பகோணம், பவானி கூடுதுறை, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளிலும் ஆடிப் பெருக்கு தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
கரூரில் ஆடிப்பெருக்கு விழா உற்சாகம்:
கரூர் அருகே உள்ள வாங்கல் மற்றும் நெரூர் பகுதியில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் திரண்டு காவிரி நதியில் புனித நீராடினார்கள்.
பின்பு, பெண்கள் வெற்றிப்பாக்கு, பழம், மஞ்சள் கயிறு வைத்து தங்களது குடும்பத்துன் காவிரி அன்னையை வழிபட்டு கழுத்தில் புதிய தாலிக் கயிற்றை மாற்றிக் கொண்டு சுமங்கலி பூசை செய்தனர்.
மேலும் , காவிரி ஆற்றில் சர்க்கரை பொங்கல், புளியோதரை போன்றவற்றை வைத்து வழிபட்டு அவற்றை உறவினர்களும், நண்பர்களும் கொடுத்து மகிழ்ந்தனர்.
கரூரில், அருள்மிகு பசுபதீஸ்வரர் கோயில், கல்யாணவெங்கட் ரணம சுவாமி, நெரூர் சதாசிவ பிரமேந்திராள் கோயில், அக்னீஸ்வர் கோயில், கருவூரார் சன்னதி போன்ற பல்வேறு கோயில்களில் காலை முதலே மக்கள் வரிசையாக நின்று சாமி தரிசனம் செய்தனர்.
அதே போல திருச்சியில் அருள்மிகு திருவரங்கம், சயமபுரம் மாரியம்மன் கோயில், உச்சிப்புள்ளையார் கோயில், வெங்காளி அம்மன் கோயில் என பல கோயில்களில் அதிகாலை முதல் மக்கள் திரண்டு சென்று சாமி தரிசனம் செய்த வண்ணம் இருந்தனர்.
ஆடிப்பட்டம் தேடி விதை' என்று ஒரு பழமொழி உண்டு. அதனால் ஆடி 18 ம் பெருக்கு அன்று விதை விதைத்தால் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்பது தமிழக விவசாயிகளின் நம்பிக்கையாகும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications