அபுதாபியில் அய்மான் சங்கத்தின் இஸ்லாமிய புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி
அபுதாபி: அபுதாபி அய்மான் சங்கத்தின் இஸ்லாமிய புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி கடந்த 25ம் தேதி அபுதாபி நஜ்தா ரோட்டில் உள்ள ஈடிஏ சமூக நலக் கூடத்தில் நடந்தது.
அபுதாபி அய்மான் சங்கத்தின் இஸ்லாமிய புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி இஸ்லாமிய புத்தாண்டான ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதமாகிய முஹர்ரம் முதல் நாள் 25.11.2011 அபுதாபி நஜ்தா ரோட்டில் உள்ள ஈடிஏ சமூகநலக் கூடத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீத் அவர்கள் தலைமை வகித்தார். அய்மான் கல்லூரியின் தலைவர் களமருதூர் ஷம்சுத்தீன் ஹாஜியார், அய்மான் துணைத் தலைவர் ஹாஜி குத்புத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அய்மான் சங்க மார்க்கத் துறை செயலாளர் மெளலவி ஷர்புத்தீன் மன்பஈ இறைமறை வசனங்கள் ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் வரவேற்புரை ஆற்றினார்.
அய்மான் சங்க பொதுச் செயலாளர் காயல் எஸ்.ஏ.சி.ஹமீது, ஹாஜி.அப்துல் வஹ்ஹாப், ஹாஜி அல்லாபிச்சை உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் மெளலவி பி.கே.என்.அப்துல் காதிர் ஆலிம் ஹிஜ்ரி ஆண்டின் சிறப்பைப் பற்றியும், முஹர்ரம் மாதத்தின் சிறப்பைப் பற்றியும் விளக்கி உரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்ச்சியில் அய்மான் கல்லூரியின் செயலாளர் கீழை செய்யது ஜாஃபர், அய்மான் சங்கத்தின் பொருளாளர் ஜமாலுத்தீன், பெரியப்பட்டிணம் ஜஹாங்கீர் உள்ளிட்ட பல்வேறு ஊர் ஜமாஅத்தின் பிரமுகர்கள் திரளாக கலந்துக் கொண்டனர். அய்மான் சங்க செயலாளர் எரவாஞ்சேரி முஹம்மது இக்பால் நன்றி கூற, பனியாஸ் அப்துல் ஹமீது மரைக்காயரின் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications