பி.எஸ்.சி நர்சிங் படிக்க விண்ணப்பிக்க ஜூன் - 16 கடைசி நாள்
சென்னை: நர்சிங் படிப்பில் டிப்ளமோ முடித்தவர்கள், நேரடியாக இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி நர்சிங் படிப்பில் சேர விண்ணப்பிக்க ஜூன் 16-ம் தேதி கடைசி நாள் தமிழக அரசின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதேபோல் பார்மஸி படிப்பில் டிப்ளமோ முடித்தவர்கள் பி.பார்ம் படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேரவும் விண்ணப்பித்துக்கொள்ளலாம் எனவும் இதற்காக விண்ணப்பப் படிவங்களை தமிழக அரசின் சுகாதாரத்துறை இணைய தளமான ( www.tnhealth.org) யில் 16- ம் தேதி பிற்பகல் 3 மணிவரை டவுன்லோடு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 16 கடைசி நாள்
இதற்கான விண்ணப்பக்கட்டணம் 350 ரூபாயை “ செயலாளர், தேர்வுக்குழு, கீழ்ப்பாக்கம், சென்னை – 10" என்ற பெயரில் டிமாண்ட் டிராப்ட்டாக கட்ட வேண்டும். எஸ்.சி, எஸ்.டி வகுப்பினர் விண்ணப்பக்கட்டணம் செலுத்த தேவையில்லை.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சென்னையில் உள்ள மருத்துவ தேர்வுக்குழு அலுவலகத்திற்க 16-ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும் என்று மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் ஷீலா கிரேஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications