அண்ணா நினைவு நாள்-திமுக அமைதிப் பேரணி-கருணாநிதி, ஜெ. அஞ்சலி

இதேபோல அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இன்று அண்ணா நினைவு நாள். இதையொட்டி திமுக சார்பில் அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் பேரணியை திருவல்லிக்கேணியில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மேயர் மா.சுப்ரமணியன், அமைச்சர்கள், திமுக தலைவர்கள், தொண்டர்கள் நடந்தே அண்ணா சமாதியை சென்றடைந்தனர்.
அங்கு முதல்வர் கருணாநிதி மலர் தூவி அண்ணாவை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தினார். அமைச்சர் அன்பழகன், மு.க.ஸ்டாலின் உள்ளிடடோரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர் முதல்வர் கருணாநிதி திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அறிவாலயம் புறப்பட்டுச் சென்றார்.
ஜெயலலிதா அஞ்சலி:
இதேபோல அண்ணா நினைவிடத்திற்கு கட்சியினருடன் வந்த ஜெயலலிதா அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அவருடன் மாநில நிர்வாகிகள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
மாநிலம் முழுவதும் அண்ணா நினைவு நாளை திமுகவினர் கடைப்பிடித்தனர். காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்திலும் அவரது நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்தப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications