யாதுமாகி நின்றாய் நீ...!
Subscribe to Oneindia Tamil

காணும் இடமெங்கும்
காட்சியாகின்றாய் !
கண்களை மூடினால்
கனவாகின்றாய் !
காற்றாய் வந்து என்
சுவாசமாகின்றாய் !
பேசும் பாஷை எல்லாம்
வார்த்தையாகின்றாய் !
கேட்கும் ஒலிகள் எங்கும்
குரலாகின்றாய் !
என் இதயத்துடிப்பின்
ஓசையாகின்றாய் !
நரம்பினுள் சென்றாடும்
உதிரமாகின்றனாய் !
உதிரத்தில் கலந்து
அணுக்கள் ஆகின்றாய் !
என் இனியவனே
எல்லாமுமாய் மாறி
எனை இயக்கும்
சக்தியாகின்றாய் நீ.












Click it and Unblock the Notifications