முன்னாள் எஸ்.ஐ.ஓ. மாநில தலைவருக்கு இளம் சாதனையாளர் விருது

கோவை சாந்தி ஆசிரமத்தின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு கலை, இலக்கியம், அரசியல், சமூக சேவை, சுற்றுச்சூழல், சுகாதாரம் போன்ற 25 துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சகோ. சலீம் அவர்களுக்கான விருதினை சாந்தி ஆசிரமத்தின் அறங்காவலர்களில் ஒருவரான திரு. ரங்கண்ணா அவர்கள் வழங்கினார். கோவை குமரகுரு கல்லூரியில் நடைபெற்ற இவ்விழாவில் திரளான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
25-ஆம் ஆண்டு வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு 2012-ஐ பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்க்கும் ஆண்டாக அனுஷ்டிக்க இருப்பதாக சாந்தி ஆசிரம நிர்வகாம் அறிவித்துள்ளது. இதையொட்டி சே நோ வயலன்ஸ் டு விமன் (SAY NO VIOLENCE TO WOMEN) என்கிற குறும்படம் ஒன்றும் வெளியிடப்பட்டது.
வெள்ளி விழா காணும் சாந்தி ஆசிரமம் கோவையில் சமூக முன்னேற்ற பணிகளையும், இளம் தலைமுறையினரிடையே சமூக சேவை உணர்வு மற்றும் மத நல்லிணக்கத்தை உருவாகுவதற்காக பாடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விருது பெற்ற சலீம் கூறியதாவது,
இந்த விருது கிடைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இது அகில இந்திய எஸ்.ஐ.ஓ. வின் ஒவ்வொரு ஊழியருக்கும் கிடைத்த விருது. ஏனென்றால் எஸ்.ஐ.ஓ. வின் ஒவ்வொரு ஊழியரும் தேசம் முழுவதும் இது போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளையே இளம் தலைமுறையினரிடையே செய்து வருகின்றனர். என்னை அடையாளம் கண்டு கொண்டதால் எனக்கு இவ்விருது வழங்கப்பட்டு இருக்கிறது. இது போன்ற விருதினை பெற எஸ்.ஐ.ஓ. வின் ஆயிரக்கணக்கான ஊழியர்களும் தகுதியானவர்கள் தான் என்றார்.
சலீம் அவர்கள் கோவை இஸ்லாமிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறார். சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு அவர் கல்வி வழிகாட்டுதல்கள் வழங்கி இருக்கிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications