இதயநோயை தடுக்கும் சீன உணவுமுறை ஆய்வில் தகவல்

Subscribe to Oneindia Tamil

Chinese Food
இரண்டு குச்சியை கையில் எடுத்துக்கொண்டு அதில் நூடுல்ஸ்சையோ, பாஸ்தாவையோ உண்ணுவதுதான் சீனர்களின் உணவு முறை என்று நினைத்தால் அது தவறு. சீனர்களின் உடல் கன கச்சிதமாய் இருப்பதற்கு அவர்களின் உணவுமுறையும் முக்கிய பங்கு வகிக்கிறது. உலகின் மிகச் சிறந்த உணவாக சீன உணவே போற்றப்படுகிறது. இந்த உணவு முறையைப் பின்பற்றினால் நீண்ட நாள் வாழலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சீனர்களின் உட்கொள்ளும் உணவினால் கொழுத்த சரீரம் உருவாகாது, இதய நோய்களுக்கான அறிகுறியே காணப்படாது. இந்த இரண்டு தன்மைகளும் ஒருவரிடம் தொடர்ந்து இருந்தால் அவர் ஆரோக்கியமாக வாழலாம். என்று ஹாங்காங்கின் சீனப்பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் ஊகாம்ஸாங் (Woo-Kam-Sang) தனது ஆய்வு முடிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சோயாவும் தயிரும்

சீனர்களின் உணவு முறை வித்தியாசமானது. அவர்கள் காலை உணவாக முட்டை ஆம்லட் அல்லது கொத்துக்கறி சேர்த்துக் கொள்கின்றனர். இதில், இஞ்சி, வெள்ளைப் பூண்டு உட்பட மசாலா வகைகள் சேர்த்துவிடுகின்றனர். இது காலை நேரத்திற்கும் பகல் உணவிற்கும் எற்ற ஒரே உணவாகும். மற்ற நேரமெல்லாம் நீராவியில் வேகவைத்த காய்கறிகளுடன் சோயா மற்றும தயிர் சேர்த்த சாதம் ஒரு முறையும், பச்சையான காய்கறிகளை ஒரு முறையும் சாப்பிடுகின்றனர். அவ்வப்போது கோழி வறுவல் அல்லது மீன் வறுவல் ஒன்றிரண்டு துண்டுகள் மட்டும் சாப்பிடுகின்றனர்.

பால் கலக்காத கிரீன் டீ

இவர்கள் அடிக்கடி விரும்பியும் போற்றியும் குடிப்பது கிரீன் டீதான். இது முதுமை அடைவதை தடுக்கும் தேநீர். மேலும் இந்தத் தேநீரில் இளமையை நீடிப்பதுடன் இதயத்துக்குப் பாதுகாப்பையும் வழங்கும் பாலிபெனால் என்ற சத்துப் பொருள் இருக்கிறது. பால் சேர்க்காத கிரீன் டீ யை தினமும் நாலைந்து தடவை அருந்துகின்றனர்.

மேற்கண்ட அனைத்து உண்மைகளும் உலகிலேயே இதய நோயாளிகள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் உள்ள பான்யு என்ற சீனக்கிராம மக்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களாகும். சீனாவின் குவாங்டங் மாகாணத்தில் இந்தக் கிராமம் இருக்கிறது.

மரபு வழி உணவு

மருத்துவர் ஊ சீனர்களின் மெயின்லாண்ட் பகுதி மக்கள் தாங்கள் சாப்பிடும் உணவில் பாதி இறைச்சியாகவும், மிகச்சிறிய அளவிலேயே பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் சாப்பிடுவதையும் கண்டு பிடித்துள்ளார்.

“சீனர்கள் தங்களின் மரபு வழி உணவுத் திட்டத்தையே பின்பற்ற வேண்டும். சோயா மற்றும் தயிரில் உள்ள லெசித்தின் என்னும் நார்ப்பொருள் உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக் கொள்கிறது. இதனால் இதய நோய் அபாயம் இல்லை. உடலும் கொழுத்த சரீரமாக உருவாகாது" என்கிறார்.

வெளிநாடுகளில் வாழும் சீனர்கள்

ஹாங்காங், சிட்னி, சான்பிரான்ஸிஸ்கோ ஆகிய நகரங்களில் சீனர்கள் பெருமளவில் வாழ்கின்றனர். பத்து ஆண்டுகள் மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றிய சீனர்களை அல்ட்ரா சவுண்டு மூலம் பரிசோதித்ததில் இவர்களின் இரத்தக்குழாய்களில் 5 இல் ஒரு பங்கு என்ற விதத்தில் தடிப்பாகிவிட்டது தெரிந்தது. எனவே, இவர்கள் இதயநோய் அபாயத்தில் உள்ளனர். வெளிநாடு சென்று கடந்த பத்தாண்டுகளுக்குப்பிறகு சீனா திரும்பிய 417 பேர் இதய நோய் அபாயத்தில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஹாங்காங்கில் வறுத்த கோழிக்கறி என்ற மேற்கத்திய உணவால் இங்குள்ள சீனர்கள் குண்டாக உள்ளனர். செல்வச் செழிப்பான சிங்கப்பூரில் வாழும் சீன இளைஞர்கள் 25 வயதுக்குள்ளேயே இரத்தக் கொதிப்பு, நீரிழிவு, இதய நோய்கள் அபாயத்தில் உள்ளனர் என்கிறார் டாக்டர் ஊ.

கிரீன் டீக்கும் நீராவியில் வேகவைத்த காய்கறிகளுக்கும் நீங்களும் முக்கியத்துவம் கொடுங்கள். உலகின் மிகச்சிறந்த இந்த உணவால் ஆரோக்கியம் தொடர்வது உறுதி. உலக சுகாதார நிறுவனம் சிபாரிசு செய்துள்ள உணவுமுறை இது என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் 2000ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+