தடுப்பூசி போட வேண்டிய நாளை எஸ்.எம்.எஸ். மூலம் நினைவூட்டும் ஹலோவேக்சின்!
குழந்தை பெற்றுக்கொள்வதை விட அவர்களை நோய் நொடியின்றி பேணிப் பாதுகாப்பதுதான் இன்றைய பெற்றோர்களுக்கு சிரமமான காரியம். பிறந்த 6 வது வாரம் முதல் 5 வயது வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் தடுப்பூசி போட வேண்டியது மிகவும் அவசியமானது. தடுப்பூசி போட வேண்டிய நாட்களை எப்படி நினைவில் வைத்துக்கொள்வது என்று ஏங்கித் தவித்த பெற்றோர்களுக்கு வரப்பிரசாதமாக வந்துள்ளது “ஹலோ வேக்சின்" எஸ்.எம். எஸ்.
மும்பையை அடிப்படையாக கொண்ட மைன்ட்ஸ்டார்ம் சாப்ட்வேர் கன்சல்டன்சி நிறுவனம் இதனை அறிமுகம் செய்துள்ளது. குழந்தையின் பெயரில் ஒரு கணக்கை தொடங்கி அவர்களின் பிறந்த நாள் தேதியை பதிவு செய்து விட்டால் போதும். குழந்தைக்குப் போட வேண்டிய தடுப்பூசியை ஒவ்வொரு முறையும் எஸ்.எம்.எஸ் மூலம் “ஹலோ வேக்சின் "நினைவுபடுத்திவிடும்.
ஒவ்வொரு தடுப்பூசிக்கும் மூன்று முறை நினைவூட்டுகிறது ஹலோவேக்சின். தடுப்பூசியின் தேதி வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே குறுந்தகவல் அனுப்பிவைக்கப்படுகிறது. இந்த சேவை ஒருசில நிறுவனங்களுக்கு மட்டுமே தற்போது அளிக்கப்பட்டு வருகிறது. தனது நிறுவன ஊழியர்களுக்கும் இந்த சேவையை அளிக்க ஹலோ சாப்ட்வேர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அந்தந்த ஏரியாவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலம் நிகழ்ச்சிகளை நடத்தவும் ஹலோ வேசின் முடிவு செய்துள்ளது.
சேவைக்கட்டணம்:
தடுப்பூசி சேவைக்காக 5 ஆண்டுகளுக்கு 10 கணக்குகளுக்கு 2000 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. ஒரு கணக்கு 200 ரூபாய் மதிப்பு பெறுகிறது. ஆனால் 25 கணக்குகளுக்கு 4000 ஆயிரம் ரூபாயும், 50 கணக்குகளுக்கு 7500 ரூபாயும் சேவைக்கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. கணக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது தனிநபர் ஒருவருக்கான கட்டணம் குறைகிறது.
ஹலோ வேக்சின்ஸ் நிறுவனம் ஜேஸ்பரின் பேபி பாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை அளித்து வருகிறது. பிறந்த குழந்தைகளுக்கு தேவையான சாதனங்களை இலவசமாக அளிக்கிறது. பரிசுகளையும் சலுகைக் கூப்பன்களையும் அளிப்பதோடு குழந்தைகளின் சுயவிபரங்களையும் பெற்றுக்கொள்கின்றனர்.
போலியோ சொட்டு மருந்து தினத்திற்காக அரசு சார்பில் ஏற்கனவே எஸ்.எம்.எஸ் அனுப்பி நினைவூட்டும் பணியை இந்த நிறுவனம் செய்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications