For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை சென்னையில் மனித உரிமைகள் கருத்தரங்கம்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: மனித உரிமைக்கான இளைஞர் அமைப்பு நடத்தும் மனித உரிமைகள் கருத்தரங்கம் சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் நாளை நடக்கிறது.

மனித உரிமைக்கான இளைஞர் அமைப்பு 'தமிழகத்தில் மனித உரிமைகள்' என்ற கருத்தரங்கினை நடத்துகிறது. இந்த கருத்தரங்கம் சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.

இதில் அணுமின் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த பாதிரியார் எக்ஸ்.டி. செல்வராஜ் மற்றும் உதயகுமார் ஆகியோர் 'அணுமின் நிலையப் பிரச்சனைகள்' என்ற தலைப்பில் உரையாற்றுகின்றனர்.

மேலும் சமூக சிந்தனையாளரும், மக்கள் உரிமை செயற்பாட்டாளுமான பேராசிரியர் அ. மார்க்ஸ் 'பரமக்குடி மோதல்' என்ற தலைப்பிலும், பத்திரிக்கையாளர் டி. அருள் எழிலன் 'தமிழக மீனவர் பிரச்சனைகள்' என்ற தலைப்பிலும், எழுத்தாளரும், மக்கள் உரிமை செயற்பாட்டாளருமான பா. செயப்பிரகாசம் 'மரண தண்டனை எதிர்ப்பு' என்ற தலைப்பிலும் உரையாற்றுகின்றனர்.

இந்த கருத்தரஙகை டி. பரமேஸ்வரி ஒருங்கிணைத்து வழங்குகிறார்.

English summary
Youth for human rights has arranged for a conference titled "Human rights in Tamil Nadu" on october 15 at Chennai Devaneya Pavanar hall. The programme starts at 9. 30 am and concludes at 1 pm.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X