உலகிலேயே இந்தியாவில்தான் டிபி பாதிப்பு அதிகம்- 25 லட்சம் பேர் பாதிப்பு: ஹூ

மனித உயிர்களை குடிக்கும் கொடிய நோய்களில் காச நோயும் ஒன்றாகும். இதற்கு சயரோகம், எலும்புருக்கி நோய் போன்ற வேறு பெயர்களும் உண்டு.
இந்தியாவில் ஒவ்வொரு நிமிடமும் 2 நபர்களுக்கு சளியில் கிருமியுள்ள காச நோய் ஏற்படுகிறது. ஒரு நோயாளி ஒரு வருடத்தில் சுமார் 10 முதல் 15 நபர்களுக்கு இந்த நோயைப் பரப்ப முடியும். காச நோய் கிருமிகளால் பரவும் ஒரு தொற்று நோய். இது பெரும்பாலும் நுரையீரலை தாக்குகிறது.
இது மூளை, நிணநீர் சுரப்பி, எலும்புகள், சிறுநீரகம், வயிறு போன்ற மற்ற உருப்புகளையும் பாதிக்கும். காசநோய் கிருமிகள் காற்றின் மூலம் பரவுகிறது. எனவே காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்ட இடங்களில் சளியைத் துப்பக்கூடாது, இருமும் போது வாயை துணியால் மூடிக்கொள்ளவேண்டும். சளியை மூடியுள்ள குப்பியில் துப்பி எரித்துவிட வேண்டும். இதன் மூலம் காசநோயானது பிறருக்கு பரவாமல் தடுக்க முடியும்.
25 லட்சம் பேர் பாதிப்பு
உலக சுகாதார அமைப்பு சார்பில் உலக அளவில் காச நோயாளிகள் குறித்து கணக் கெடுப்பு நடத்தப்பட்டது. இதனையடுத்து உலக காசநோய் கட்டுப்பாடு-2011' என்னும் தலைப்பில் சமீபத்தில் உலக சுகதார அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆண்டில் 88 லட்சம் நோயாளிகளின் பெயர்கள் இந்த அமைப்பில் பதிவு செய்யப்பட்டன. காச நோயாளிகள் எண்ணிக்கையில் 25 லட்சம் பேருடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அடுத்தபடியாக 12 லட்சம் நோயாளிகளுடன் சீனா 2-ம் இடம் வகிக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் 59 ஆயிரம் பேரும், இந் தோனேசியாவில் 54 ஆயிரம் பேரும், பாகிஸ்தானில் 48 ஆயிரம் பேரும் காச நோய் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications