இங்கிலீஷ் கால்வாயை நீந்தி கடந்து 18 வயது இந்திய பெண் சாதனை

Subscribe to Oneindia Tamil

Ramya
லண்டன்: இங்கிலாந்திற்கும் பிரான்ஸ் நாட்டிற்கும் இடையே உள்ள இங்கிலீஷ் கால்வாயை 18 வயது இளம்பெண் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரியாக இருப்பவர் ராஜசேகர். அவரது மகள் ரம்யா சிந்தபாலி (18). நீச்சல் வீராங்கனையான ரம்யா, அதிக தூரம் நீந்தும் பயிற்சியில் ஈடுபட்டார். அதன்பின் இங்கிலாந்து-பிரான்ஸ் நாடுகளிடையே உள்ள இங்கிலீஷ் கால்வாயை நீந்தி கடக்க முடிவு செய்தார்.

மொத்த 560 கி.மீ. நீளமும், 240 கி.மீ. அகலமும் கொண்ட இந்த கால்வாயில் பூஜ்ய டிகிரியை ஒட்டிய வெப்பநிலை நிலவும். மேலும் ஜெல்லி மீன்களும், அலையும் இந்த கால்வாயில் அதிகளவி்ல் காணப்படுகிறது.

இந்நிலையில் ரம்யா 5 பேர் கொண்ட நீச்சல் குழுவினருடன் சேர்ந்து நேற்றுமுன்தினம் இங்கிலாந்து நாட்டின் டோவர் பகுதியில் இருந்து நீச்சலை துவக்கினார். நேற்று காலையில் பிரான்ஸ் கடற்கரையை எட்டினார். ரம்யா உடன் நீச்சலடித்த ஒருவர் வழியில் களைப்படைந்து மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டார். பின்னர் மருத்துவ சிகிச்சைக்கு பின் சகஜநிலைக்கு வந்தார்.

இது குறித்து ரம்யாவின் பயிற்சியாளரும், பிரிய்ட்டோன் நீச்சல் கிளப்பின் செயலருமான பியோனா செளவுத்வெல் கூறியதாவது, இந்த சாதனையை நிகழ்த்த ரம்யா மிகவும் விரும்பி வந்தார். அதற்காக மிக சிறப்பான பயிற்சியும் எடுத்து கொண்டார். யாருக்கும் அவ்வளவு எளிதில் வராத இது போன்ற ஆசையை நான் தடுக்கவில்லை. ஆனால் கடலில் எந்த இடத்திலும் அவர் களைப்படையவில்லை, என்றார்.

இதுகுறித்து சாதனையாளர் ரம்யா கூறியதாவது, கடந்த 7ம் தேதி தான் எனது 18வது பிறந்தநாளை கொண்டாடினேன். கடும் குளிர் மற்றும் ஜெல்லி மீன்களுக்கு இடையி்லும், எனது தன்னம்பிக்கையினால் இந்த சாதனையை நிகழ்த்த முடிந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+