கிரேக்கத்தின் சுவையை சென்னையில் வழங்கும் கிரிப்டாஸ்!

சென்னை நுங்கம்பாக்கம் காதர் நவாஸ்கான் சாலையில் அமைந்துள்ளது 'கிரிப்டாஸ் பை வில்லி' உணவகம்.
கிரேக்க நாட்டு உணவுகளுக்கென்றே பிரத்தியேகமாக திறக்கப்பட்டுள்ள இந்த உணவகத்தின் சிறப்பு அதன் செஃப் வில்லி. இந்தியாவிலேயே ஒரு செஃபின் பெயரில் இயங்கும் ஒரே உணவகம் கிரிப்டாஸ்தான்.
ஏன் அப்படி?
"வில்லி நியூஸிலாந்துக்காரர். ஆனால் இந்தியாவே என் தாய்நாடு என்று செட்டிலாகிவிட்டார். இவர் ரோம், ஏதென்ஸ் என கிரேக்க - ரோமானிய நகரங்களுக்குப் போய் தங்கியிருந்து அந்நாட்டு உணவுகள் தயாரிக்கும் கலையை கற்று வந்தார். அதன் பிறகே இந்த உணவகத்தை ஆரம்பித்தேன். வில்லி இந்த உணவகத்தின் பணியாளர் அல்ல. அதைவிட மேல். ஒரு பார்ட்னர் மாதிரி. இதன் நிரந்தர பலம் அவர் என்பதை உணர்த்தவே அவர் பெயரில் உணவகம் திறந்தேன்," என்கிறார் இதனை நடத்தும் விபின் சச்தேவும் அவர் மனைவி சோமாவும்.
இந்த உணவகத்தில் என்ன ஸ்பெஷல்...
ஒரு முறை சிங்கப்பூரிலிருந்து ஒருவர் வந்திருந்தார். சொன்னால் நம்ப மாட்டீர்கள்... இந்த உணவகத்தில் கிடைக்கும் கிரேக்க உணவு வகைகளின் சுவையை வேறு ஒருவர் மூலம் அறிந்து சாப்பிட்டுப் பார்க்க வந்ததாக சொன்னார். நானும் கூட முதலில் நம்பவில்லை. பின்னர் அவரது நண்பர்கள் சொன்ன பிறகுதான் எனக்கும் உண்மை தெரிந்தது.
ஏதென்ஸில் கிடைக்கும் மோஸுகா, ரோல்டு கைரோஸ், சோலாகி என அத்தனையும் இங்கே ஒரிஜினல் சுவையுடன் கிடைக்கும், என்கிறார் ஓட்டலின் பொறுப்பாளரான சோமா.
இங்கு தயாராகும் அனைத்து உணவு வகைகளுமே ஆலிவ் ஆயிலால் தயாரிக்கப்படுபவை.
அந்த நேரம் பார்த்து அங்கு வந்தார் செஃப் வில்லி. சரி, வித விதமாக நாடுகளின் உணவுகளை சென்னைக்கு அறிமுகம் செய்கிறீர்களே... உங்களுக்குப் பிடித்த உணவு என்ன என்றோம்.
சிம்பிள்... சென்னையில் என்றால் தோசை, சாம்பார். எகிப்தில் பிரபலமான அந்த பறவைக் கறி பிடிக்கும்," என்றார்.
சாலட்டுகள் மிக ஃபிரஷ்ஷாக இங்கு கிடைக்கின்றன. விதவிதமான சாலட்டுகளை விருப்பப்படி எடுத்துக் கொள்ளலாம்... விலை பிளேட்டுக்கு ரூ 280!












Click it and Unblock the Notifications