ரியாத்தில் தவ்ஹீத் ஜமாத் நடத்திய மாபெரும் ரத்ததான முகாம்
ரியாத் மாநகரிலுள்ள மிகப்பெரும் மருத்துவமனைகளில் ஒன்றான கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனை இரத்த வங்கியில் கடந்த 27-ம் தேதி மாபெரும் ரத்ததான முகாம் நடந்தது. இது காலை 9.30 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.
300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இம்முகாமை தமிழ் முஸ்லிம்கள் ஏற்பாடு செய்திருந்தாலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலத்தவர்களுடன் சேர்த்து, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், எகிப்து, சிரியா மற்றும் ஏமன் நாட்டை சேர்ந்தவர்களும் ரத்ததானம் செய்தனர்.
தனது உடன்பிறந்த சகோதரனுக்குக்கூட இரத்த தானம் செய்ய பலர் தயங்கி வரும் இக்கால கட்டத்தில் கண்ணுக்கு தெரியாத நோயாளிகளுக்காக இரத்த தானம் செய்ய இங்கு போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர். அதில் ஒருவர், தான் 23வது முறையாக இரத்ததானம் செய்கிறேன் என்று கூறி மக்களை நெகிழ்ச்சியடையச் செய்தார் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலத்தின் இரத்த தான பொறுப்பாளர் ஃபெய்ஸல் முஹம்மது குறிப்பிட்டார்.
இது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மாநகரில் நடத்தும் 11-வது இரத்த தான முகாமாகும். முகாம்கள் மட்டுமின்றி அவசர தேவைகளுக்காகவும் அடிக்கடி இரத்ததானம் வழங்கப்பட்டு வருகின்றது.
அதிகமானோர் இரத்ததானம் செய்ததில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகத்தில் தொடர்ந்து பல வருடங்களாக முதலிடத்தில் இருந்து விருதுகளை பெற்று வருவது போல, சவுதி அரேபியாவிலும் தமிழ் அமைப்பான ரியாத் மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றது.
மேலும், இதே நாளில் சவூதி அரேபியாவின் மற்றோரு பகுதியான தமாம் நகரத்திலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இரத்த தான முகாம் நடத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications