ஊட்டி மலை ரயிலுக்கு புதிய என்ஜின்-சோதனை ஓட்டம் வெற்றி
ஊட்டி: ஊட்டி மலை ரயிலுக்கு வாங்கப்பட்டுள்ள புதிய என்ஜினின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று ஊட்டி மலை ரயிலாகும். மேட்டுப்பாளையத்திலிருந்து இது இயக்கப்படுகிறது. மலைப் பாதையில் வளைந்து நெளிந்து ஓடும் இந்த ரயிலில் பயணம் செய்தபடி ஊட்டி மலை அழகை ரசிப்பது தனி சுகமாகும்.
சுற்றுலாப் பயணிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த ரயிலுக்கு பழைய அறுதப் பழசான என்ஜின்களை வைத்து ஓட்டி வந்தனர். இதனால் மலை ரயில் பல முறை என்ஜின் பழுது காரணமாக வழியில் நிற்கும் அவலம் நீடித்து வந்தது.
இதையடுத்து நிரந்தரத் தீர்வாக, புதிய என்ஜின்களைப் பொறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து திருச்சி பொன்மலை ரயில் பெட்டித் தொழிற்சாலையில் புதிய என்ஜின்கள் தயாரிக்க ஆர்டர் தரப்பட்டது.
நான்கு என்ஜின்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில் முதல் என்ஜின் தற்போது வந்துள்ளது. அதன் சோதனை ஓட்டம் மேட்டுப்பாளையம் முதல் கல்லார் வரை நடத்தப்பட்டது. அது வெற்றி பெற்றதாக இன்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இனி புதிய என்ஜினைக் கொண்டு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் தடங்கலின்றி பயணம் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications