கேரள பட்ஜெட் : சபரிமலை-மாஸ்டர் பிளானுக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு

Subscribe to Oneindia Tamil

Sabarimala
திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் சபரிமலை மாஸ்டர் பிளானுக்கு ரூ.100 கோடி நிதிஒதுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் முதல்வர் அச்சுதானந்தன் தலைமையிலான இடது முன்னணி அரசின் கடைசி பட்ஜெட் நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு,

சபரிமலை மாஸ்டர் பிளானுக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான முதல் கட்ட பணிகள் அடுத்த வருடம் நிறைவடையும். புல்மேடு சம்பவம் போல் இனிமேல் நடைபெறாமல் இருக்க மாஸ்டர் பிளானில் பல்வேறு தி்ட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சாலை மேம்பாட்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடி திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இனி மேல் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.10 ஆயிரம் இன்சூரன்ஸ் செய்யப்படும். இந்த குழந்தைகள் பிளஸ்டூ முடித்தவுடன் வங்கிக் கடன் திட்டத்துடன் இணைந்து உயர் கல்வி பயிலவோ, தொழில் தொடங்கவோ வட்டியுடன் சேர்த்து வழங்கப்படும். இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவுடன் பால், முட்டை வழங்கப்படும்.

சுற்றுலாத் துறையை மேம்படுத்த ரூ.105 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வீடுகளில் மின்சார மீ்ட்டருக்கு வசூலிக்கப்படும் மாதவாடகை ரூ.10 ரத்து செய்யப்படும் என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+