துபாயில் வாழ்வின் வெற்றிக்கான திறவுகோல் குறித்த கருத்தரங்கம்

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் 'வாழ்வின் வெற்றிக்கான திறவுகோல்" எனும் தலைப்பிலான சிறப்புக் கருத்தரங்கினை கடந்த 8-ம் தேதி மாலை துபாய் இந்தியன் இஸ்லாமிக் சென்டர் அரங்கில் நடத்தியது.

இந்த கருத்தரங்கிற்கு துபாய் இஸ்லாமிய வங்கியின் துணைத் தலைவர் ஜாபர் அலி தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் கற்றது கை மண் அளவு, கல்லாதது உலக அளவு எனகுறிப்பிட்டார். எனவே வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் நாம் கற்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

துவக்கத்தில் திண்டுக்கல் ஜமால் முஹ்யித்தீன் இறைவசனங்களை ஓதினார். திருச்சி ஜாஹிர் ஹுசைன் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர் ஸ்ரீஜித் ராதாகிருஷ்ணன் குறித்த அறிமுகவுரையினை மீரான் வழங்கினார். குளோபல் சக்ஸஸ் சிஸ்டம்ஸ் முதன்மை ஆலோசகர் ஸ்ரீஜித் ராதாகிருஷ்ணன்

'வாழ்வின் வெற்றிக்கான திறவுகோல்' எனும் தலைப்பில் பல்வேறு உதாரணங்களுடன் கணினி படங்கள் மூலம் விளக்கினார். அதனைத் தொடர்ந்து கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

ஈடிஏ கல்வி நிறுவன இயக்குநர் சையத் எம். கலந்தர் அவர்கள் சமீபத்தில் மறைந்த ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் வெற்றி பெற பசித்திரு, விஷயம் அறியாத முட்டாளாக இரு எனக் கூறியதை நினைவு கூர்ந்தார். அதனைத் தொடர்ந்து ஸ்ரீஜித் ராதாகிருஷ்ணனுக்கு நினைவுப் பரிசுவழங்கப்பட்டது. ஆடிட்டர் அப்துல் ரசாக் நன்றி கூறினார். நிகழ்ச்சியை முதுவை ஹிதாயத் தொகுத்து வழங்கினார்.

இந்த கருத்தரங்கில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் மட்டுமல்லாது பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஜாபர் சித்திக், காஜா, ஃபயாஸ் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+