அனிமேஷனில் சிபிஎஸ்இ பாடங்கள்: சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு வரும் 'ஸ்பிகா ஸ்டார்'!

6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான சிபிஎஸ்இ பாடத் திட்ட மாணவர்களுக்கு, பாடங்களை முற்றிலும் புதுமையாக அனிமேஷன் முறையில் ஆன்லைனில் அப்டேட் செய்யவிருக்கிறது இந்த நிறுவனம். புத்தக முறைக்கு மாற்றாக இந்த புதிய திட்டம் அமையவிருக்கிறது.
இதுகுறித்து நிறுவனத்தின் சிஇஓ தீனதயாளன் பார்த்தசாரதி கூறுகையில், "ஸ்பிகா ஸ்டாரின் பலமே, அதன் எளிமைதான். பாடங்கள் எத்தனை கடினமாக இருந்தாலும் மாணவர்கள் அதை ரசித்துப் படித்து புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையாகவும் பொழுதுபோக்காகவும் தரவிருக்கிறோம்," என்றார்.
இந்தத் திட்டத்துக்கான நிதியுதவியை சிங்கப்பூரின் பிரபல ஆரம்ப முதலீட்டு (வென்ச்சர் கேபிடல்) நிறுவனமான மெர்காடஸ் கேபிடல் செய்கிறது. மெர்காடஸ் கேபிடலின் தலைவரான ரவீந்திரன் கோவிந்தன்தான் இந்த புதிய புராஜக்டின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுள்ளார். மெர்காடஸ் கேபிடலின் துணைத் தலைவர் அரவிந்தன் வாசு, ஸ்பிகா ஸ்டாரின் இந்த திட்டத்துக்கு சிஇஓவாக செயல்படுவார்.
ஸ்பிகா ஸ்டாரின் முதல்கட்ட பாடங்கள் வரும் 2012 ஜூன் மாதத்தில் ஆன்லைனில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்கள் இந்த முதல் கட்ட பாடங்களை ஆன்லைனில் உபயோகிக்கலாம்.












Click it and Unblock the Notifications