8ல் துபாயில் தமிழ்த்துளி மன்றத்தின் தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு 2011
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் தமிழ்த்துளி மன்றத்தின் "தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு 2011" எனும் சிறப்பு நிகழ்ச்சி வரும் 8-ம் தேதி மாலை 05.30 மணிக்கு ஸ்டார் சர்வதேசப் பள்ளியில் நடைபெற இருக்கிறது.
அமீரகத்தில் குழந்தைகளின் தமிழ்ப் பேச்சுக் கலையை வளர்க்கும் வண்ணம் துவங்கப்பட்டது தமிழ்த் துளி மன்றம்.
இம்மன்றத்தின் முதல் சிறப்பு நிகழ்ச்சியில் பேராசிரியர் பர்வீன் சுல்தானா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாறுறுகிறார். இதில் சிறு வயது குழந்தைகளின் பல்சுவை கலை நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்த தகவலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரியா தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் தகவல் அறிய விரும்புவோர் 050-7472432/050-8456175 எனும் அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.













Click it and Unblock the Notifications