துபாயில் ‘தமிழ்த்தேர்’ மாத இதழ் முதல் அச்சுப் பிரதி ‘செம்மொழித் தமிழ்’ வெளியீட்டு விழா
துபாய்: துபாயில் தமிழ்த்தேர் மாத இதழின் முதல் அச்சுப் பிரதியான 'செம்மொழித் தமிழ்" வெளியீட்டு விழா கடந்த 4-ம் தேதி நடந்தது.
துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் மாத இதழான 'தமிழ்த்தேர்" 4 ஆண்டுகளாக பிரதியெடுத்து வெளியிடப்பட்டு வருகிறது. தற்போது முதன்முதலாக அச்சுப் பிரதி வெளியிடும் விழா கடந்த 4-ம் தேதி துபாய் கனடியன் பல்கலைக்கழக அரங்கில் நடந்தது. பெரும்புலவர் திரு.முஸ்தபா, குவைத் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவரும் தற்போது ருவைஸில் பணிபுரியும் திரு. பாலசுப்ரமணியனும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
இந்த விழா மாலை 7.00 மணிக்கு செல்வி.ஆனிஷா பானுவின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. திரு.கீழை ராஸா தொகுத்து வழங்கினார். இதை தொடர்ந்து செல்வி.நிவேதிதா வரவேற்பு நடனம் ஆடினார். பின்னர் அவர் தனது 'மதர்ஸ் ப்ரீஸ்" குழுவினருடன் இணைந்து செம்மொழிப் பாடலுக்கும், 'சாரல்" எனும் இசைத்தொகுப்புப் பாடலுக்கும் சிறப்பாக நடனமாடினார். அடுத்து துபாய் நகைச்சுவை மன்றத்தைச் சேர்ந்த திரு.ரமணி மற்றும் திரு.நெல்லை அவர்கள் நகைச்சுவைத் துணுக்குகளை வழங்கி, பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து செல்வி.ஸ்ரீவித்யா கிருஷ்ணகுமார் 'இன்னிசை பாடிவரும்" எனும் 'துள்ளாத மனமும் துள்ளும்" திரைப்படப் பாடலை கீபோர்டில் வாசித்து பார்வையாளர்களின் கைதட்டல்களைப் பெற்றார். பின்னர் வானலை வளர்தமிழ் மற்றும் தமிழ்த்தேரின் 4 ஆண்டுகாலம் கடந்து வந்த பாதை காணொளியாக திரையில் வெளியிடப்பட்டது. அதற்குப் பின்னணியாக இசைக்கோர்ப்புடன் செல்வி.நிவேதிதா தானே எழுதிப்பாடிய 'தமிழ்த்தேரே! தமிழ்த்தேரே!" பாடல் ஒலித்தது. இக்காணொளியை உருவாக்குவதில் திரு.கீழை ராஸாவும், திரு.லஷ்மி நாராயணனும் முக்கிய பங்கு வகித்தனர்.
அடுத்து சிறப்பு விருந்தினர்கள், வானலை வளர்தமிழ் அமைப்பின் தலைவரும் சிவ்ஸ்டார் குழும நிறுவனங்களின் உரிமையாளருமான திரு.கோவிந்தராஜ், அஜ்மான் அமீரகத் தமிழர் அமைப்பின் தலைவர் மற்றும் தொழிலதிபர் டாக்டர் திரு.மூர்த்தி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். வானலை வளர்தமிழ் ஆலோசகர் திரு.காவிரிமைந்தன் வரவேற்புரை நிகழ்த்தினார். திரு.மூர்த்தி வாழ்த்துரை வழங்கினார். அமைப்பின் தலைவர் திரு.கோவிந்தராஜ் தலைமையுரை நிகழ்த்தினார். முதல் பிரதியை திரு.கோவிந்தராஜ் வெளியிட, திரு.முஸ்தஃபா பெற்றுக் கொண்டார். இரண்டாவது பிரதியை திரு.காவிரிமைந்தன் வெளியிட, திரு.பாலா பெற்றுக் கொண்டார். மூன்றாவது பிரதியை செயலாளர் திரு.சிம்மபாரதி வெளியிட, அஜ்மான் திரு.மூர்த்தி பெற்றுக் கொண்டார்.
'தமிழ்த்துளி" அமைப்பின் நிறுவனர் திருமதி.ப்ரியா அவர்கள் குழந்தைகளுக்கு தமிழ்க்கல்வி கற்பிப்பதின் அவசியம் பற்றி பேசினார். விழாவில் கலந்துகொண்ட ஈடிஏ அஸ்கான் நிர்வாக இயக்குநர் அலுவலக மேளாலர் திரு.மீரான் அவர்கள் இப்பணிக்காக தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.
இதனை அடுத்து சிறப்பு விருந்தினர்கள் திரு.பாலா மற்றும் திரு.முஸ்தஃபா ஆகியோர் தமிழ் குறித்தும், அதன் பெருமைகள் குறித்தும், மற்ற மொழிகளைவிட தமிழுக்குத் தான் செம்மொழிக்கான முழுத் தகுதியும் உண்டு என்பதை ஆதாரங்களுடன் விளக்கினர்.
இந்நிகழ்வில் வானலை வளர்தமிழின் ஊக்குவிப்பாக அதன் உறுப்பினர் அதிரை திரு.இளையசாகுல் அவர்களின் முதல் கவிதைத் தொகுப்பு 'அவளுக்கும் உண்டு உணர்வுகள்" எனும் கவிதை நூல் வெளியிடப்பட்டது. அதன் மதிப்புரையை கவிஞர் திரு.இரஜகை நிலவன் வழங்கினார். ஏற்புரையில் கவிஞர் இளையசாகுல் ஒவ்வொரு விரலுக்கும் இத்தொகுப்பு வெளிவரக் காரணமான ஒரு நபரைக்குறிப்பிட்டு தன் நன்றியை வெளிப்படுத்திய விதம் பார்வையாளர்களைக் கவர்ந்தது.
இறுதியாக, இலக்கிய மேடையை ஜனரஞ்சக மேடையாக்கி தந்திரக் கலைஞர் வைக்கோம் ஷா அவர்களின் அற்புதமான தந்திரக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதைப் பார்த்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிசயித்தனர். இந்த நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது.
துணைத்தலைவர் ஜியாவுத்தீன் நன்றியுரை வழங்கினார். இந்த இதழ் சிறப்பாக அச்சில் வெளிவர, கவிஞர் இசாக் தனது தமிழ் அலை அச்சகம் மூலம் இதழை சிறப்பாக வடிவமைத்து அச்சிட்டு வழங்கினார்.
கீழை ராஸா, சிம்மபாரதி, லஷ்மி நாராயணன், முகவை முகில், ஆனந்தன், ஆதி பழனி, தண்டலம் பழனி ஆகியோர் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications