இலங்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் கையெழுத்து இயக்கம்: திருமாவளவன் தொடங்கினார்
சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகிறது. அதில் ஒரு பகுதியாக இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் கையெழுத்து இயக்கத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் துவக்கி வைத்தார்.
இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுவை மற்றும் தமிழகத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
தனி ஈழ நாடு அமைய, ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த 10 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் பணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஈடுபட்டுள்ளது. கடந்த 12-ம் தேதி துவங்கப்பட்ட இந்த கையெழுத்து இயகக்கம் வரும் 3-ம் தேதி முடிவடைகிறது.
இதன் ஒரு பகுதியாக இன்று செனனை உயர் நீதிமன்றத்தில் கையெழுத்து பெறும் நிகழ்ச்சியை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் துவக்கி வைத்தார். இதையடுத்து வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது. அப்போது கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பழனிமுத்து மற்றும் நிர்வாகிகள் நீதிமன்றத்தில் கையெழுத்து பெற்றனர்.
இது குறித்து திருமாவளவன் கூறியதாவது,
இலங்கையில் இறுதி கட்டப்போரில் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை போர்க் குற்றவாளி என்று அறிவிக்குமாறு ஐ.நா. சபையை வலியுறுத்தி 10 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் பணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஈடுபட்டுள்ளது. இந்த மனு நாடு கடந்த தமிழீழ அரசு மூலம் ஐ.நா. பொதுச் செயலாளரிடம் அளிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications