திருச்செந்தூர் கோவில் ஆவணித் திருவிழா 7-ம் நாள்: ஆறுமுகநயினார் தங்க சப்பரத்தில் வீதியுலா
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் ஆவணி திருவிழாவின் 7-ம் நாளான நேற்று சுவாமி ஆறுமுக நயினார் தங்க சப்பரத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்தார்.
அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா வரும் 30-ம் தேதி வரை தொடர்ந்து 12 நாட்கள் நடக்கிறது. தினமும் காலை, மாலையில் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருகின்றனர்.
திருவிழாவின் 7-ம் நாளான நேற்று காலை 5.30 மணிக்கு சுவாமி சண்முக பெருமாள் உருகு சட்டசேவை நடந்தது. 8 மணிக்கு சுவாமி வெட்டிவேர் சட்டசேவை நடந்தது. பின்னர் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும் நடந்ததுய மாலை 4.30 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வந்தார்.
இன்று அதிகாலை சுவாமி ஆறுமுகநயினார் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளி சாத்தி எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வந்து மேலக்கோவில் சேர்ந்தார்.
அங்கு அபிஷேக, அலங்கார, தீபாரதனை நடந்தது. காலை 10.20க்கு சுவாமி ஆறுமுக நயினார் பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலாவந்து இரவில் கோவிலை அடைகிறார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications