இன்று மாலை கல்லணையில் தண்ணீர் திறப்பு: அமைச்சர் வைத்திலிங்கம் திறந்து வைப்பு
தஞ்சாவூர்: தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட குறுவை சாகுபடிக்காக இன்று மாலை கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 6-ம் தேதி திறந்துவிடப்பட்ட தண்ணீர் இன்று (வியாழக்கிழமை) மதியம் கல்லணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து இன்று மாலை 5 மணிக்கு கல்லணையில் இருந்து பாசனத்திற்காக காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, கல்லணைக் கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் வைத்திலிங்கம் கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைக்கிறார்.
தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் தஞ்சை கலெக்டர் (பொறுப்பு) சுரேஷ்குமார், திருவாரூர் கலெக்டர் முனியநாதன், நாகை கலெக்டர் முனுசாமி, எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொள்கின்றனர். கல்லணைக்கால்வாயில் மட்டும் தஞ்சை மாவட்டத்தில் 58 ஏ பிரிவு வாய்க்கால்கள், 129 பி பிரிவு வாய்க்கால்கள், 82 சி பிரிவு வாய்க்கால்கள், 21 டி பிரிவு வாய்க்கால்கள், 6 இ பிரிவு வாய்க்கால்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 ஏ பிரிவு வாய்க்கால்கள், 24 பி பிரிவு வாய்க்கால்கள் உள்ளன.
கல்லணைக் கால்வாயில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் தஞ்சை வண்டிக்காரத் தெரு பகுதியில் உள்ள 20 கண்பாலம் வழியாக ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளுக்கு செல்லும். இதற்காக 20 கண்பாலம் சீரமைக்கப்பட்டு தண்ணீர் செல்லத் தயாராக உள்ளது.












Click it and Unblock the Notifications