வரமாய் நீ கிடைத்தாய்!
Subscribe to Oneindia Tamil

என் ரட்சகனே….
நெருப்பாற்றில் நின்றிருந்தேன்
பனி மழையாய் நீ வந்தாய் !
சூறாவளியில் சிக்கியிருந்தேன்
தென்றால் வந்தென்னை
தழுவி நின்றாய் !
பாலைவனத்தில் தவித்திருந்தேன்
சோலையாய் மாறி அரவணைத்தாய் !
முள்ளின் மீது நடந்து சென்றேன்
பூக்களாய் மாறி முத்தமிட்டாய் !
கரும்பாறையாய் நானிந்தேன்
உன் விரலால் தட்டி சிற்பமாக்கினாய் !
திசை தெரியது தடுமாறினேன்
கலங்கரை விளக்கமாய் நீ வந்தாய் !
என்ன தவம் செய்தேனோ
வரமாய் நீ கிடைத்தாய்!












Click it and Unblock the Notifications