உலக நகைச்சுவை தினம்– நல்லா சிரிங்க, நல்லா இருங்க!

நகைச்சுவையின் சிறப்பை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் மே மாதம் முதல் ஞாயிறன்று நகைச்சுவை தினமாக கொண்டாடி வருகின்றனர் நகைச்சுவையாளர்கள்.
ஒருவரின் மனநிலைக்கும் அவரின் மகிழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனத்தில் மகிழ்ச்சி குறையக்குறைய உடல் நலமும் பாதிக்கத் தொடங்கும். நகைச்சுவையினால் ஏற்படக்கூடிய சிரிப்பு மனத்துக்கு ஊட்டமாக அமைகிறது. மனத்தின் சுமையைக் குறைக்கிறது. உடலுக்கு ஆரோக்கியத்தை, புத்துணர்ச்சியைத் தருகிறது. மனத்துக்கு என்று இருக்கும் ஒரே மருந்து சிரிப்பு மட்டுந்தான்.
மருந்துகளை ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள், மருந்துகளுக்கு எல்லாம் மருந்தாக இருப்பது சிரிப்பு மருந்து என்று கூறியிருக்கின்றனர்.
நோய் எதிர்ப்பு சக்தி
நோய்களைப் போக்கவும் மீண்டும் அவை வராமலிருக்கவும் நோய் எதிர்ப்புச் சக்தியை உடலுக்குத் தருகிறது சிரிப்பு. நாம் சிரிக்கும்போது, மூக்கிலுள்ள சளியில் 'இம்யூனோகுளோபுலின்&ஏ" என்னும் நோய் எதிர்ப்புப் பொருள் அதிகரிக்கிறது. அதனால், பாக்டீரியா, வைரஸ், புற்றுநோய்த் திசுக்கள் உடலுக்குள் சென்று விடாதவாறு தடுக்கப்படுகிறது.
உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியாகச் செயல்படுகின்ற வெள்ளை அணுக்களுக்கு மிகவும் விருப்பமானது சிரிப்பு. சிரிக்கும் போது வெள்ளை அணுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன. சிரிப்பினால், ரத்தம் தூய்மையாகிறது. ரத்த அழுத்தம் குறைகிறது. நுரையீரல் நன்கு செயல்படுகிறது.
சிரிப்பினால், 'என்சிபேலின்ஸ்" என்னும் ஹார்மோன் சுரக்கிறது. அது தசைகளில் ஏற்படும் வலிகளை நீக்குகிறது. இரைப்பைப் புண் குணமாகிறது.
மாரடைப்பை தடுக்கிறது
இன்றைய காலகட்டத்தில் ஹார்ட் அட்டாக் எனப்படும் மாரடைப்பு நோய் ஏற்பட்டு எண்ணற்றோர் உயிரிழக்கின்றனர். சிரிப்பானது கொழுப்பினால் ஏற்படும் மாரடைப்பு நோய் வராமல் தடுக்கப்படுகிறது. நாள் தோறும் குறைந்த அளவு ஒரு மணி நேரமாவது, சிரித்துப்பழகவேண்டும். நகைச்சுவைப் படங்கள், வசனங்கள், கதைகள், சொற்பொழிவுகள் போன்றவற்றைக் கேட்டுக் கேட்டுச் சிரித்துப் பழகவேண்டும்.
மூளை நரம்புகள் சிறப்பாகச் செயல்படத் தொடங்குகின்றன. எனவே, நோய் வராமல் தடுக்கவும் வந்த நோயிலிருந்து விடுபடவும் சிரித்துப் பழகுங்கள்
நட்பு வட்டம் பெரிதாகும்
நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு நண்பர்கள் வட்டம் பெரிதாக இருக்கும். உறவு பலமாக இருக்கும். புன்னகை என்பது ஆன்மாவின் உருவம். கண்ணுக்குத் தெரியாமல் உள்ளுக்குள் மறைந்திருக்கும் ஆன்மா, தனது அழகை வெளிப்படுத்தும்போது, புன்னகை தோன்றுகிறது. ஆன்மா உடலுக்கு எவ்வளவு முக்கியமோ அதைப்போல உடல் நலத்துக்கு ஆன்மா வழங்கும் புன்னகை முக்கியம்.
மகிழ்ச்சியாய் இருப்போம்
இந்த அவசரமயமான உலகத்தில் எல்லோருக்கும் பல வித எதிர்பார்ப்புகள், அலுவலகத்தில் பல நெருக்கடிகள், வீட்டில் பல சச்சரவுகள் என பல காரணங்களால் சிரிப்பதையே மறந்துவிடுகிறார்கள்.
இதுபோன்ற பலர், சிரிப்பின் பலனை உணர்ந்து, இப்போதெல்லாம் நகைச்சுவை சங்கங்களை அமைத்து, அவ்வப்போது கூடி வாய்விட்டு சிரித்து மகிழ்ந்து வருகிறார்கள்.
சிரிப்பினால், உடல் நலம் பெறும். நகைச்சுவையாக பேசுவதால் நண்பர்கள் அதிகமாவர்கள் எனவே சிரித்து பேசி அனைவருடன் மகிழ்ச்சியாய் இருப்போம். இதனால் உலகம் நம் உள்ளங்கைக்குள் வரும் என்பதை உணர்வோம்.
'நரசிம்ம ராவ்' மாதிரி இருப்பதை விட்டு விட்டு மதன் பாப் மாதிரி குலுங்கிக் குலுங்கிச் சிரித்து வாழ்வோம்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications