துபாய் த‌மிழ்ப் பெண்க‌ள் ச‌ங்க‌ம் ந‌ட‌த்திய சமையல் போட்டி

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாய் தமிழ்ப் பெண்கள் சங்கத்தின் மே மாத நிகழ்ச்சி பெண்களுக்குச் சமையல் போட்டியும், ஆண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியுமாக துபாய் இந்தியா கிளப் உத்சவ் ஹாலில் 25.05.2012 அன்று மாலை சிறப்பாக நடந்தது.

மேடையை த‌மிழ்ப் பெண்க‌ள் சங்க உறுப்பினர்கள் த‌ங்க‌ள‌து கணவன்மார்களுக்கே தந்ததால் தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது உள்ளிட்ட‌ அனைத்துப் பொறுப்புக‌ளையும் அவர்களே பார்த்துக் கொண்டார்கள். அதனால் பெண்கள் இம்முறை நிகழ்ச்சிகளை அமர்ந்து பார்க்கும் அரிய வாய்ப்பை பெற்றனர்.

சங்கச் செயலாளர் காயத்ரி சந்திரசேகர் வரவேற்புரை வழங்கி மைக்கை நிகழ்ச்சிச் தொகுப்பாளர் கிருஷ்ணனிடம் கொடுக்க மூன்றெழுத்து தமிழ்க்கு சிறப்பு வணக்கம் சொல்லி தமிழ்த்தாய் வாழ்த்து பாட திரு. தியாகராஜன், திரு. முரளி இராமலிங்கம் அவர்களை அழைத்தார். இருவரும் தமிழ்த்தாய் வாழ்த்தினை அருமையாகப் பாடினர். சங்கத் தலைவி திருமதி மீனாகுமாரி பத்மநாதன் உறுப்பினர்களுக்கு முன்னுரை வழங்கினார்.

சங்கச்சிறப்பு நிகழ்ச்சி குறள் சொல்லும் நேரத்தை குறள் அறியும் நேரமாக மாற்றி, குழந்தைகள் குறளை நாடகமாக நடித்துக் காட்டி அது என்ன குறள் என பார்வையாளர்களைக் கேட்க வைத்து அசத்தினர். இந்த அசத்தல்களை வடிவமைத்துக் கொடுத்தவர்கள் திரு. தியாகராஜன், திரு. முரளி இராமலிங்கம் அவர்கள்.

ஜேம்ஸ் கேம்ரூனின் வசனத்திற்கு ஹாலிவுட் நடிகர்கள் எப்படி பேசுவார்கள் என பல குரல்களில் பேசி அனைவ‌ரின் கவனத்தையும் ஈர்த்தார் சிங்காரவேலன்.

காலத்திற்கேற்ற மாற்றத்தோடு கல்வியும் வேண்டும். 'கற்றவர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு', இஸ்ரோ என்ன? நாஸா என்ன? எங்கும் அறிவு என்னும் ஒளி ஒளிரும் என்பதை திரு.ஆனந்த் அவர்களின் 'போர்த் இடியட்(4th Idiot)' என்ற நகைச்சுவைக் குறு நாடகம் சிரிப்போடு, சிந்திக்கவும் தூண்டுவதாக இருந்தது.

'குலுங்கக் குலுங்க சிரித்தால் குறைந்து போகும் நோய்கள்' என்பதற்கேற்ப லாஜிக் பார்க்காமல் குழந்தைகள் போல மனசு இலேசாக சிரித்து மகிழ வேண்டுமென திரு.ஸ்ரீராம் ஸ்ரீனிவாசன் அவர்களின் சிந்தனையில் உருவான சைலன்ஸ் காமெடியில் மிஸ்டர் பீன், சார்லி சாப்ளின் மற்றும் பலர் நம்மிடையே வந்து வயிறு வலிக்க சிரிக்க வைத்தனர்.

சொல்லுக்குள் சுகம் என்ற பகுதியில் இம்முறை உணவு-சமையல் குறித்த விளக்கம், பொருள், பயன்பாடு, இலக்கியச்சான்றுகள் குறித்து திருமதி. மீனாகுமாரி பத்மநாதன் அளித்த விளக்கவுரை பயனுள்ளதாக இருந்தது. மெயின் கோர்ஸ், ஸ்டாட்டர்ஸ், டெஸர்ட்ஸ் என 3 தலைப்புக்களில் நடத்தப்பட்ட பெண்களுக்கான சமையல் போட்டியில் உறுப்பினர்கள் பலர் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். சாதாரண சமையல் போட்டி பார்த்துப் போரடித்ததால் உறுப்பினர்களின் எண்ணத்தைத் தூண்டும் விதமாக ஒரே குடும்ப வகையைச் சேர்ந்த காய்களைக் கொண்டு அதில் மெயின் கோர்ஸ் கண்டிப்பாகவும், ஸ்டாட்டர்ஸ், டெசர்ட்ஸில் ஒன்று என 2 அயிட்டம் கட்டாயம் பங்கேற்க வேண்டும். உறுப்பினர்கள் பலர் மூன்றிலும் பங்கேற்றனர்.

வாழை, பலா, கார்ன், மேத்தி, மேங்கோ, முள்ளங்கி என இக்குடும்பத்தைச் சேர்ந்த பூ, காய், விதை என்று பல்வேறு அயிட்டங்களை வைத்துப் புதுமை படைத்து, அழகு படுத்தி பார்ப்போரை உண்ணத் தூண்டுவதாக சமைத்திருந்த விதம் எண்ணி எண்ணிப் பாராட்டுதற்குரியது.

'ஆர்யாஸ் கோர்மெண்ட் வெஜ் ரெஸ்டாரெண்டைச் சேர்ந்த திரு முருகேசன், திரு சக்திவேல் இருவரும் வெள்ளிக்கிழமை என்றாலும், நமக்காக வந்து பொறுமையாக ஒவ்வெரு டிஸ்ஸையும் சுவைத்து, தரம், பயன்படுத்திய முறை, பக்குவம் என ஒன்று விடாமல் பார்த்து அதில் உள்ள குறை, நிறைகளைச் சொல்லியதோடு ஸ்டாட்டர்ஸில் திருமதி. புவனேஸ்வரி அருணாச்சலம், திருமதி. ஜெயஸ்ரீ ஆனந்த், மெயின் கோர்ஸில் திருமதி. ரமா ராம்நாத், திருமதி. சஞ்சாலட்சுமி, டெஸர்ட்ஸில் திருமதி. சஞ்சாலட்சுமி, திருமதி. ஜெயஸ்ரீ ஆனந்த், பெஸ்ட் இன்னோவேட்டிவ் பரிசினைத் திருமதி. ஜெயஸ்ரீ ஆனந்த் என்று உறுப்பினர்கள் தட்டிச் சென்றனர்.

சமையல் போட்டி வெற்றியாளர்களைத் தேர்வு செய்ய ஜட்ஜ் அனுப்பி துணைசெய்த 'ஆர்யாஸ் கோர்மெண்ட் வெஜ் ரெஸ்டரண்ட்' மேனேஜிங்க டைரக்டர் திரு. கிருஷ்ணகுமார் அவர்களுக்கும், ஸ்பான்சர் வழங்கிய 'சில்லி வில்லி' புட் புரொடக்ஸ்' நிறுவனத்தாருக்கும் சங்கத்தார் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

காயத்ரி சந்திரசேகர் அனைவருக்கும் நன்றி கூற, சுவையான இரவு உணவோடு விழா இனிதே நடந்தேறியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+