வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை தலைவராக தண்டபாணி குப்புசாமி தேர்வு

வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின், 2012-2014 ஆகிய ஆண்டுகளுக்கான தேர்தல் பணிகள் கடந்த ஒரு மாதமாக, தேர்தல் அலுவலர் திரு.சிவானந்தம் மாரியப்பன்(மின்னசோட்டா தமிழ்ச்சங்கம்) அவர்களின் மேற்பார்வையில் இடம் பெற்றன.
இத்தேர்தலில், கிட்டத்தட்ட 26 தமிழ்ச்சங்கங்கள், பேரவைப் பேராளர்கள், வாழ்நாள் உறுப்பினர்கள் எனப் பலரும் நேரடியாகப் பங்கு பெற்றார்கள். முடிவில், கீழ்க்கண்டவர்கள் பேரவை நிர்வாகிகளாகத் தெரிவு செய்யப்பட்டதாகத் தேர்தல் அதிகாரி நியூயார்க் நகரில் அறிவித்தார்.
தலைவர்: முனைவர் தண்டபாணி குப்புசாமி
(பனை நிலம் தமிழ்ச் சங்கம் - சார்ள்சுடன் - தென் கரோலினா)
துணைத் தலைவர்: பீட்டர் யெரோணிமூஸ்
(வாசிங்டன் வட்டார தமிழ்ச் சங்கம் - வாசிங்டன் டி.சி.)
செயலாளர்: பதிவர் பழமைபேசி என்கிற மெளன.மணிவாசகம்
(தென்-மத்திய தமிழ்ச் சங்கம் - மெம்ஃபிசு - டென்னசி)
துணைச்செயலாளர்: செந்தாமரை பிரபாகர்
(சார்லட் நகர தமிழ்ச் சங்கம் - வட கரோலினா)
பொருளாளர்: தங்கமணி பாலுச்சாமி
(அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் - அட்லாண்டா - ஜார்ஜியா)
இயக்குநர் 1: கரு மலர்ச்செல்வன்
(பேரவை ஆயுட்கால உறுப்பினர் - க்யூசுடன் - டெக்சாசு)
இயக்குநர் 2: யோபு தானியேல்
(மிசெளரி தமிழ்ச் சங்கம் - செயிண்ட் லூயிசு - மிசெளரி)
இயக்குநர் 3: பிரகல் திரு
(கனடியத் தமிழர் பேரவை - கனடா)
இயக்குநர் 4: சாரங்கபாணி குகபாலன்
(இலங்கை தமிழ்ச் சங்கம் - அமெரிக்கா)
தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு, தமிழறிஞர் மறைமலை இலக்குவனார், பேரவையின் முன்னாள் தலைவர் முனைவர் அரசு செல்லையா, முன்னாள் தலைவர் க.தில்லைக்குமரன் உள்ளிட்ட ஏராளமானோர் பாராட்டுதல்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர். புதிய நிர்வாகிகள் அனைவரும், ஜூலை மாதம் பால்ட்டிமோர் நகரில் கோலாகலமாய் இடம் பெறவிருக்கும் பேரவை வெள்ளிவிழாவில் தத்தம் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்கள்.
நன்றி: http://muelangovan.blogspot.in
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications