24ல் குவைத்தில் முப்பெரும் நிகழ்வுகள்: கே-டிக் ஏற்பாடு
குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ( K-Tic ) குவைத் தேசிய தினத்தையொட்டி முப்பெரும் நிகழ்வுகளை வரும் 24ம் தேதி மாலை 6 மணிக்கு ஃகைத்தான் கே-டிக் தமிழ் ஃகுத்பா பள்ளிவாசலில் நடத்த இருக்கிறது. இந்த தகவலை சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ தெரிவித்தார்.
திருக்குர் ஆனை திருத்தமாக ஓதுவோம் வாருங்கள், வாங்க ... பேசிப் பழகலாம் எனும் ஓர் எளிய மேடைப்பயிற்சி, என்னைக் கவர்ந்தார் பெருமானார் (ஸல்) எனும் தலைப்பில் சிறப்புப் பேச்சுப் போட்டி உள்ளிட்ட முப்பெரும் நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன.
பேச்சுப்போட்டியில் வயது, நாடு, மத வேறுபாடின்றி ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். பெண்களுக்கு தனியிட வசதியும், இரவு உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் கீழ்க்கண்ட தொடர்பு எண் மற்றும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
ஹாட்லைன்: (+965) 97 87 24 82
மின்னஞ்சல் முகவரி: [email protected] / [email protected]
அதிகாரப்பூர்வ இணையதளம்: http: //groups.google.com/group/q8tic


Click it and Unblock the Notifications
