குவைத்தில் ஆரோக்கிய வாழ்விற்கான கருத்தரங்கம்

மாலை 6. 45 மணிக்கு சகோதரர் அப்துல் பாரி அவர்கள் திருமறை குர்ஆன் வசனங்கள் ஓத சகோதரர் சிக்கந்தர் பாட்ஷா அவர்களின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி இனிதே துவங்கியது. சகோதரர் சிக்கந்தர் பாட்ஷா அவர்களே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
பின்னர் கேஐஎப்எப்-ன் தலைவர் அப்துல் சலாம் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் இந்நிகழ்ச்சிக்கான முக்கியத்துவத்தையும் தேவையையும் எடுத்துரைத்தார். அதன் பிறகு ஜம்மியத்துல் இஸ்லாஹி தலைவர் டாக்டர். சுலைமான் ஷெட்தி அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார்கள். இஸ்லாத்தில் உள்ள உணவு முறைகளை பற்றி விரிவாக கூறிய அவர், இதற்கு ஏற்பாடு செய்த கேஐஎப்எப்-க்கு பாராட்டுக்களை தெரவித்தார்.
அதன் பிறகு "இஸ்லாமும் ஆரோக்கியமும்" என்ற தலைப்பில் டாக்டர். அப்துல் ரகுமான் (ஜஹ்ரா அரசு மருத்துவமனை) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். "நீங்கள் அல்லாஹ்வை நினைவு கொண்டால் உங்களுடைய மனது எந்தவித குழப்பமும் இன்றி சாந்தமாக இருக்கும், அது உங்களுடைய ஆரோக்கியத்தை அதிகரிக்கும். இதை மனதில் உறுதியாக ஏற்றுக்கொண்டு நபிமார்களும்,ஷஹாபாக்களும் தங்களுடைய வாழ்க்கையில் ஆரோக்கியத்திற்கு அளித்த முக்கியத்துவத்தை பற்றி விரிவாகக்கூறினார். மேலும் அன்றாட வாழ்க்கையில் நாம் உட்கொள்ள வேண்டிய உணவுகள் பற்றியும், அதன் நன்மை தீமைகள் பற்றியும் அழகுற எடுத்துரைத்தார்.
அதைத் தொடர்ந்து "இதயநோய்கள்" என்ற தலைப்பில் டாக்டர். தாமஸ் ஐசக் (அல்-ஷபா மருத்துவமனை) அவர்கள் உரையாற்றினார். இதயம் எவ்வாறெல்லாம் நம்முடைய நடவடிக்கையின் மூலம் பாதிக்கப்படுகின்றது, அதை எப்படியெல்லாம் நம்மால் எதிர்கொள்ள முடியும் என்று விளக்கினார்.
மேலும் திரு.ஹஷன் யூசுப் (தலைவர்,கர்நாடக முஸ்லிம் வெல்பேர் அசோசியேசன்), திரு.பஷீர் (தலைவர், கேகேஎம்ஏ(டி.கே) விங்) ஆகியோர் இந்நிகழ்ச்சி குறித்த தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக மக்கள் அன்றாட வாழ்க்கையில் பேண வேண்டிய உடற்பயிர்ச்சிகளை (ஆசனங்களை) கேஐஎப்எப்-ன் தன்னார்வ தொண்டர்கள் மூலம் செய்து காண்பிக்கப்பட்டது.
இறுதியாக சகோதரர். சிராஜ் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி சிறப்பாக நிறைவுற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். கேஐஎப்எப்-ன் தன்னார்வ தொண்டர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications