துபாயில் ஈமான் அமைப்பு வழங்கும் தமிழகத்து நோன்புக் கஞ்சி

இது குறித்து ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி கூறுகையில், ஈமான் அமைப்பு கடந்த 1976ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த அமைப்பு கல்வி மற்றும் சமுதாய மேம்ப்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
ஈமான் அமைப்பின் தலைவர் செய்யது எம். ஸலாஹுத்தீன் தலைமையிலும், துணை தலைவர்கள் பி.எஸ்.எம். ஹபிபுல்லாஹ் மற்றும் எம். அப்துல் ரஹ்மான் வழிகாட்டுதலிலும், பொதுச் செயலாளர் ஏ. லியாக்கத் அலி, துணை பொதுச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், விழாக்குழு செயலாளர்கள் காயல் யஹ்யா முஹ்யித்தீன், கீழை ஹமீது யாசின், கல்விக்குழுச் செயலாளர் மதுக்கூர் ஹிதாயத்துல்லாஹ், இஃப்தார் குழுவினர் கோவை இல்யாஸ், படேஷா பஷீர், வி.களத்தூர் ஷாகுல் ஹமீது, வி.களத்தூர் ஷர்புதீன், இஸ்மாயில் ஹாஜியார், ஜமால், முஹைதீன், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஆரம்ப காலத்தில் நோன்புக் கஞ்சி காய்ச்சி வழங்கும் நிகழ்ச்சி மிகச் சிறிய அளவில் ஆரம்பித்து தற்பொழுது தினமும் 3,500க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டு வருகிறது. கஞ்சி தயாரிக்கும் பணி கும்பகோணம் அன்வர் குழுவினரால் காலையில் ஆறு மணிக்கு துவங்கப்பட்டு நண்பகல் வரை தொடர்கிறது. அதன் பின்னர் அவை தனித் தனி கோப்பைகளில் ஊற்றப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.
நோன்புக் கஞ்சியுடன் பேரிச்சம்பழம், தண்ணீர், இரண்டு சமோசாக்கள், ஆரஞ்சு, ஜுஸ் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது என்றார்.
இச்சேவை குறித்து பலரது கருத்துக்கள் வருமாறு,
தமிழகத்திலிருந்து அலுவலகப் பணியின் காரணமாக அமீரகம் வந்த கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் நந்தகுமார் ஈமான் அமைப்பு அமீரகத்தில் தினமும் 3,000 க்கும் மேற்பட்ட நோன்பாளிகளுக்கு நோன்புக் கஞ்சி வழங்குவதை அறிந்து ரமலானின் முதல் நாள் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இது குறித்து நந்தகுமார் கூறுகையில், ஈமான் அமைப்பின் நிர்வாகிகளின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டுகிறேன். அமீரகத்தில் தமிழக சுவையுடன் கூடிய நோன்புக் கஞ்சி ஏதோ தமிழகத்தில் இருப்பது போன்றதொரு உணர்வினை ஏற்படுத்தியுள்ளது.
இனம், மதம், மொழி என்ற பேதமின்றி இந்தியர், இலங்கையர், பாகிஸ்தானியர், அரபு நாட்டவர், பங்களாதேசைச் சேர்ந்தவர், ஆப்பிரிக்க நாட்டவர் என உலக நாட்டவர் அனைவரும் ஒருங்கிணைந்து உலக ஒற்றுமையினைப் பறைசாற்றும் நிகழ்வாக இந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சி அமைந்துள்ளது என்றார்.
நீக்ரோ நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் வரிசையாக பரப்பி வைக்கப்பட்டிருந்த நோன்பு திறப்பு உணவுகளைப் பார்த்து சொன்னார்:
"வெரி நைஸ்... நோன்பாளிகளுக்கு இப்படி உணவு தருபவர்களை அல்லாஹ் விரும்புகிறான்!"
கல்லூரி மாணவியைப் போல் இருந்த ஒரு இளம்பெண் அங்கே வரிசையாய் நோன்பு திறக்க உட்கார்ந்தவர்களை தனது கேமராவில் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார். அவரிடம் "நீங்க யார்? ஏன் இதை போட்டோ எடுக்கிறீர்கள்? என்பதை தெரிந்து கொள்ளலாமா?" எனக் கேட்ட போது அதற்கு அந்தப் பெண் சொன்ன பதில் :
"நான் ஹாலந்து நாட்டைச் சேர்ந்தவள். என் பெயர் மோனிகா. முஸ்லீம்கள் ரம்ஜான் மாதத்தில் இறைவனை பிரார்த்தித்து உணவு உண்ணாமலும், தண்ணீர் பருகாமலும் நோன்பு வைக்கும் இந்த செயலும், நோன்பு திற்க்கும்போது ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் இப்படி சரிசமமாக உட்கார்ந்து சாப்பிடுவதும் எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. இதை என் நாட்டு மக்களுக்கும், என் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் காண்பிப்பதற்காகவே போட்டோ எடுக்கிறேன்."
எதிரில் கடைவைத்திருந்த சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு கடை உரிமையாளர் கூறுகையில்,
"நான் இங்கே 2 வருஷமாக இந்த கடையை நடத்தி வருகிறேன். ரமலான் மாதத்தில் ஈமான் அமைப்பு நடத்தும் நோன்பு திறப்பு நிகழ்ச்சியைப் பார்த்து நான் என் கடையில் வேலை பார்க்கும் இஸ்லாமியர்களுக்கு என் செலவில் பழங்கள், பழரசங்கள், உணவு வாங்கிக் கொடுத்து அவர்கள் நோன்பு திறப்பதற்கு உதவி செய்வதில் என் மனதுக்கு ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கிறது. அவர்களும் மகிழ்ச்சி அடைந்து என்மீது சகோதர பாசத்துடன் பழகுகிறார்கள். விசுவாசமாய் உழைக்கிறார்கள் என்றார்.
இந்த நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் தங்கள் வீட்டு விஷேசத்தை செய்வதைப்போல் ஈடுபாட்டோடு செய்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications