தேவதையே சீக்கிரம் வா...!

உலக அளவில் காதலர்கள் பேசும் முக்கிய வார்த்தைகளைக் கோர்த்து ஒரு வரிசைப்படுத்தியுள்ளனராம். உலகின் எந்த மூலைக்குப் போனாலும் இப்படித்தான் அல்லது இதே ரீதியில்தான் காதலர்கள் பேசிக் கொள்கிறார்களாம்.. அது என்ன என்று பார்ப்போமா...
- ஐ லவ் யூ. உன்னை என் இதயத்தின் ஆழத்திலிருந்து காதலிக்கிறேன். நீ பிரிந்து போகும்போது நான் சோகமடைகிறேன்.. உன்னை நினைத்து கனவு காண்கிறேன்.. நீ என்னுடனேயே தங்கும் வரை காத்திருக்கப் பொறுமை இல்லை.. தேவதையே, சீக்கிரமே வந்து விடு.
- என்னிடம் HRT என்ற மூன்று எழுத்துக்கள் மட்டுமே உள்ளன. ஆனால் அது எனக்குப் போதுமானதாக இல்லை. அத்துடன் EA என்ற வார்த்தைகளையும் சேர்த்து HEART என்ற உன் இதயத்தைப் பெற விரும்புகிறேன். ஒருவேளை அது எனக்குக் கிடைக்காவிட்டால் EA என்ற எழுத்துக்களை நீக்கி விட்டு U என்ற எழுத்தை மட்டும் சேர்த்து HURT என்ற பாதிப்பை சந்தித்து விடுவேன். ஆனால் எனக்கு HURT வேண்டாம். உன்னுடைய HEART மட்டுமே வேண்டும்... தருவாயா...
- நீ விட்ட காதல் அம்பு என் இதயத்தை தாக்கியபோது நான் குழைந்தேன், துடித்தேன், வென்றேன், அழகு பெற்றேன், வாகை சூடினேன்...
- நீ என்னுடனேயே இருந்தாலும் சரி அல்லது என்னை விட்டுப் பிரிந்தாலும் சரி, எப்போதும் என் மனதிலேயே தங்கியிருக்கிறாய் என் தேவதையே.. என் இதயத்தோடு ஒன்றியிருக்கிறாய்.
- சிலருக்கு நட்சத்திரம் ஒரு தீப்பந்தமா என்று சந்தேகம் வரலாம். சிலருக்கு வானம் நீல நிறமா என்று சந்தேகம் வரலாம். சிலருக்கு நாம் பொய்யரா என்று சந்தேகம் வரலாம்.. ஆனால் ஐ லவ் யூ என்று உன்னைப் பார்த்து நான் சொல்லும்போது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
- உன்னை நினைப்பது ரொம்பவும் எளிது. அதைத்தான் தினமும் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் உன்னை இழப்பது இதயத்தை உடைப்பது போல. அதை மட்டும் என்னால் எளிதில் நினைக்க முடியவில்லை.
- வாழ்க்கை என்பது வாழ்வதற்காக, உனக்காக நான் வாழ்கிறேன். வாழ்க்கை என்பது கொடுப்பதற்காக, நான் என்னையே உனக்குக் கொடுக்கிறேன். இதயம் என்பது துடிப்பதற்காக, நான் உனக்காக துடிக்கிறேன். அர்த்தங்கள் நிறைந்தது கனவு, ஆனால் எனக்குள் முழுமையாக நிறைந்திருப்பது நீ... நீ...நீ மட்டுமே.
- என்னுடைய இதயத்தில் உன்னுடைய கண்களின் பிளாஷை நான் சேமித்து வைத்திருக்கிறேன். உன்னுடைய புன்னகையின் வெப்பத்தை சேர்த்து வைத்திருக்கிறேன்.. உன்னுடன் மிகவும் நெருக்கத்தில் நெருங்கியிருக்கிறேன், உன்னை அரவணைத்து நிற்கிறேன், உன்னைக் காத்து நிற்கிறேன்... என்றென்றும்...
இதே பாணியில்தான் உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் பேசிக் கொள்கிறார்களாம்.. இந்த லிஸ்ட்டில் நீங்க இருக்கீங்களா...












Click it and Unblock the Notifications