இன்று துபாயில் நகைச்சுவைத் தமிழ்த் திருவிழா
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் அமீரக நகைச்சுவையாளர் மன்றத்தின் நகைச்சுவைத் தமிழ்த் திருவிழா மற்றும் புத்தகக் கண்காட்சி இன்று மாலை கராமா சென்டரில் நடைபெற இருக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கு அமீரக நகைச்சுவையாளர் மன்ற தலைவர் சுரேஷ் தலைமை தாங்குகிறார். கணேஷ் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
குமுதம் மற்றும் கல்கண்டு ஆகிய இதழ்களின் துணை ஆசிரியர் லேனா தமிழ்வாணன், மணிமேகலை பிரசுரத்தின் நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications