விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி சூரியநமஸ்கார யோகா
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்: நாகர்கோவிலில் சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாளையொட்டி சூரிய நமஸ்கார யோக பயிற்சி முகாம் நடைபெற்றது.
விவேகானந்த கேந்திரம் சார்பில் இந்து கல்லூரி வளாகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய விவேகானந்த கேந்திர பொருளாளார் அனுமந்தராவ், உடலையும் மனதையும் வளப்படுத்தும் யோகாசன பயிற்சி சூரிய நமஸ்காரம். சூரியநமஸ்காரம் செய்தால் யோகாசனம், பிராணயாமம் இரண்டும் செய்வதன் பலன் கிடைக்கும் என்றார்.
இம்முகாமில் மாவட்டம் முழுவதும் உள்ள 33 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்கேற்றனர்.












Click it and Unblock the Notifications