குவைத் பாவேந்தர் கழகம் சார்பாக வரும் 12ம் தேதி 'தண்டமிழ் தலைவிழா'
Subscribe to Oneindia Tamil

குவைத் பாவேந்தர் கழகத்தின் சார்பாக 'தண்டமிழ்த் தலைவிழா' என்ற தமிழ் கலாச்சார நிகழ்ச்சி வரும் 12ம் தேதி மாலை 4 மணிக்கு சால்மியா இந்தியன் மாடல் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு அனுமதி இலவசம்.
விழாவில் பிரபல தமிழ் கவிஞர் கங்கை மணிமாறன் 'மறந்தாயா மறத்தமிழா' என்ற தலைப்பில் தமிழில் சொற்பொழிவு நிகழ்த்த உள்ளார். மேலும் பிரபல திரைப்பட பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம், குவைத் நீலிமா மற்றும் பூர்ணிமா ஆகியோர் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளனர். திரைப்பட நடிகர் இளவரசனும் விழாவில் கலந்து கொள்ள உள்ளார்.
விழாவில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசுப் பொருட்களும் வழங்கப்பட உள்ளது. எனவே விழாவில் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து தருமாறு, குவைத் பாவேந்தர் கழகம் கேட்டு கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications