மீடியா கில்ட் விருது பெற்ற அமீரக தமிழ்ச் சங்க தலைவர் ரமேஷ்

அமீரக தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ரமேஷ் உள்பட 14 பேருக்கு இந்தியாவில் வழங்கப்படும் மீடியா கில்ட் விருது கிடைத்துள்ளது.
இந்த விருது பெற்றது குறித்து ரமேஷ் கூறுகையில்,
மீடியா கில்ட் விருது கிடைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த தருணத்தில் மீடியா கில்ட் குழு, சென்னை மெட்ரோ, அமீரக தமிழ்ச் சங்கம் மற்றும் பிற அமைப்புகளுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஸ்பான்சர்கள் மற்றும் எனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவில்லையென்றால் அமீரக தமிழ்ச் சங்கமும், இந்த ரமேஷும் இல்லை என்றார்.
மீடியா கில்ட் விருது பெற்ற முதல் வெளிநாடு வாழ் தமிழர் ரமேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
அமீரக தமிழ்ச் சங்கம் www.uaetamilsangam.com/utshelpdesk.asp என்ற ஆன்லைன் உதவி மையத்தை துவங்கியுள்ளது. இந்த இணையதளத்திற்கு சென்று உங்கள் சந்தேகங்களுக்கு விடை பெற்றுக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications