ஐக்கிய அரபு எமிரேட் தமிழ் சங்கம் சார்பில் நவராத்திரி கொலு போட்டி

ஐக்கிய அரபு எமிரேட் தமிழ் சங்கம் சார்பில் நவராத்திரி கொலு போட்டி 2012 அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அபுதாபி, துபாய், சார்ஜா, அலன், அஜ்மான், புஜைரா உள்ளிட்ட ஐக்கிய அரபு எமிரேட் பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம்.
இப்போட்டியில் கலந்து கொள்ள விதிமுறைகள் பின்வருமாறு:
1.போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புவோர் ஐக்கிய அரபு எமிரேட்டை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
2.கொலு அமைத்துள்ள யார் வேண்டுமானாலும் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
3.ஒரு குடும்பம், நிறுவனம் அல்லது நபர் அனுப்பும் ஒரு விண்ணப்பம் மட்டுமே போட்டிக்கு ஏற்று கொள்ளப்படும்.
4.போட்டிகளில் கலந்து கொள்ள தகுதியான போட்டோக்களை, இ-மெயில் மூலம் [email protected] என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
5.போட்டிக்காக அனுப்பப்படும் போட்டிகளில் கொலு குறித்த தகவல்கள், தலைப்புகள் இடம் பெற்றிருக்க வேண்டும்.
6.அனுப்பப்படும் போட்டோக்களின் அமைப்பு, செய்முறை, கருத்து, உழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நடுவர்கள் மதிப்பீடு செய்வார்கள்.
7.வெற்றி பெறும் போட்டோக்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
8.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. இதில் எந்த மாற்றமும் செய்யப்படாது.
9.ஐக்கிய அரபு எமிரேட்டை தவிர மற்ற பகுதிகளில் வசிக்கும் மக்களும் தங்களின் போட்டோக்களை அனுப்பலாம். ஆனால் பரிசு பெறுவதற்காக பரிசீலனைக்கு எடுத்து கொள்ளமாட்டாது.
10.போட்டியில் பங்கேற்க விரும்புவோர் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 23, 2012.
மேற்கண்ட விதிமுறைகளை நினைவில் கொண்டு கொலு போட்டியில் கலந்து கொள்ளுமாறு ஐக்கிய அரபு எமிரேட் தமிழ் சங்கம் அறிவித்துள்ளது.
'மீசை ஆனாலும் மனைவி' நாடகம்:
ஐக்கிய அரபு எமிரேட் தமிழ் சங்கம் சார்பாக வரும் 19ம் தேதி அபுதாபியில் உள்ள இந்திய பண்பாட்டு மற்றும் கலாச்சார மையத்தில் கிரேஸி மோகனின் குழுவினர் வழங்கும் 'மீசை ஆனாலும் மனைவி' என்ற நகைச்சுவை நாடகம் நடைபெற உள்ளது. காட்சி நேரம் மாலை 5 மணி முதல் 8 மணி வரை. அனைவருக்கும் அனுமதி இலவசம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications