துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பு ந‌ட‌த்திய‌ இஃப்தார் நிக‌ழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பு தமிழ்த்தேர் மாத இதழ் சார்பில் துபாய் கராமா சி்வ்ஸ்டார் பவனில் 29.07.2012 அன்று மாலை இப்ஃதார் எனும் நோன்பு திறப்பு நிக‌ழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து நடந்த விழாவிற்கு அமைப்பின் தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்க, சிறப்பு விருந்தினர்களாக ஈ.டி.ஏ. அஸ்கான் குழும‌ ம‌னித‌வ‌ள‌ மேம்பாட்டு மேலாள‌ர் செய்ய‌‌து அபுதாஹிர் மற்றும் இன்டோ அர‌ப் டெக்க‌ர் குழும‌ மேலாண்மை இய‌க்குந‌ர் புண்ணியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சிற‌ப்புரையாற்றினர்.

பல்வேறு அமைப்புகளின் சார்பாக வந்திருந்த பிரமுகர்களான ஈமான் பொதுச் செய‌லாள‌ர் லியாகத் அலி, அமீரகத் தமிழ் மன்றத்தின் ஆசிஃப் மீரான், அமீர‌க‌ காயிதே மில்ல‌த் பேர‌வை பொதுச் செயலாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா, அஜ்மான் தமிழர்க‌ள் அமைப்பின் அப்துல் லத்தீப், தமிழ்நாடு பண்பாட்டுக்கழகத்தின் குத்தாலம் அஸ்ரப், தாய்மண் வாச‌க‌ர் வட்டத்தின் அமைப்பாள‌ர் செ.ரெ.பட்டணம் மணி, க‌விஞ‌ர் அச‌ன்ப‌ச‌ர் என்ற‌ கவிமதி மற்றும் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் எஸ்.எம்.பாரூக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மத நல்லிணக்கத்திற்கு சாட்சியாக அமைந்த இந்த விழாவில் வானலை வளர்தமிழ் மற்றும் அமீரகத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளின் அங்கத்தினர்கள் குடும்பத்தினருடன் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சிவ்ஸ்டார் கோவிந்தராஜ், காவிரிமைந்தன், சிம்மபாரதி, ஜியாவுதீன், கீழை ராஸா மற்றும் ஆதிபழனி ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+