27ல் துபாயில் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பேச்சுப் போட்டி
துபாய்: துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பேச்சுப் போட்டி வரும் 27ம் தேதி அல் தவார் ஸ்டார் சர்வதேச பள்ளியில் நடைபெறுகிறது.
துபாய் ஈமான் அமைப்பு வருடந்தோறும் மீலாத் பெருவிழாவினையொட்டி பேச்சுப் போட்டி நடத்தி வருகின்றது. இந்த ஆண்டுக்கான போட்டி வரும் 27ம் தேதி மாலை 4 மணிக்கு அல் தவார் ஸ்டார் சர்வதேச பள்ளியில் நடைபெறுகிறது. இந்த தகவலை அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் குற்றாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி தெரிவித்துள்ளார்.
இந்த போட்டியில் கலந்து கொள்பவர்கள் அண்ணல் நபிகளார் ஓர் அழகிய முன்மாதிரி எனும் தலைப்பில் இல்லறம், வணிகம், வீரம், ஆட்சிமுறை, நட்பு, வணக்கம், பொறுமை, எளிமை, நேர்மை, விஞ்ஞானம் உள்ளிட்ட கருத்துக்களில் உரை நிகழ்த்தலாம்.
அனைத்து சமூகத்தினரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டியாளர்களுக்கு 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். பேசுவதற்கான நேரம் 5 நிமிடங்கள். மேற்காணும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் தமிழில் மட்டுமே பேச வேண்டும். போட்டி நடைபெறும் அரங்கினுள் போட்டியாளர்கள் 15 நிமிடங்கள் முன்னதாக வந்து தங்களது வருகையை உறுதி செய்ய வேண்டும்.
இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் வரும் 15ம் தேதி்க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களைப் பெற 050 5196 433 / 055 800 7909 / 050 58 53 888 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.
இந்நிகழ்விற்கு ஈடிஏ அஸ்கான், லேண்ட்மார்க் ஹோட்டல், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், அல் மஸ்ரிக் இன்டர்னேஷனல், அரபியா டாக்ஸி, அல் ஹஸீனா ஜுவல்லர்ஸ், இந்தியா சில்க் ஹவுஸ், அபுதாபி செட்டிநாடு உணவகம், நிக்காஹ்.காம் உள்ளிட்டவை அணுசரனை வழங்கியுள்ளன.












Click it and Unblock the Notifications