மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் அழகு சாதனங்கள்… ஆய்வில் எச்சரிக்கை
லிப்ஸ்டிக், ஹேர் ஜெல் போன்ற அழகு சாதனப் பொருட்களில் ஆபத்தான ரசாயனங்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் அவ்வப்போது எச்சரித்து வருகின்றனர். இந்த நிலையில் அழகு சாதனங்கள் உபயோகிப்பதால் மலட்டுத்தன்மையும், மார்பகப் புற்றுநோயும் ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
சராசரி பெண்கள் அன்றாடம் பயன்படுத்தும் அழகு சாதனங்களில் 500க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் கலந்துள்ளதாக இங்கிலாந்தில் உள்ள வாசனை திரவிய நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
சில வகை நச்சுத் தன்மையுள்ள ரசாயனங்களை பயன்படுத்துவோருக்கு நரம்பு சார்ந்த கோளாறுகள் மற்றும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

லிப்ஸ்டிக் அபாயம்
பெண்கள் காலையில் மேக் அப் போதும், மாலையில் விசேச நேரங்களிலும் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு இரு முறையாவது லிப்ஸ்டிக் பயன்படுத்துகின்றனர். இதில் 9 வகை ரசாயனங்கள் கலந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குடல் புற்றுநோய்
குடல் புற்று நோய்க்கு காரணமான குரோமியம் போன்ற உலோக கலவைகளும் லிப் ஸ்டிக் தயாரிப்பில் பயன்படுத்தப்படுவதாக தெரிய வந்துள்ளது.
சராசரியாக மனித உடல் கிரகித்துக் கொள்ளும் அளவிற்கும் 20 சதவீதம் அதிகமாக அலுமினியம், காட்மியம், மேங்கனீஸ் போன்றவை லிப்ஸ்டிக்கில் பயன்படுத்தப்படுகிறது.

ஷாம்பு கூட ஆபத்து
அதேபோல் அன்றாடம் பயன்படுத்தும் பேஸ்ட், ஷாம்பூ போன்றவைகளில் சிந்தெட்டிக் ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இது நீண்ட காலத்திற்கு காலாவதியாகாமல் இருப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த ரசாயனம் பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் அளவில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

மலட்டுத்தன்மை வரலாம்
இதுபோல், பெண்கள் உபயோகிக்கும் பல்வேறு வகையான அழகு சாதனங்களில் தீங்கு விளைவிக்கக்கூடிய 500க்கும் மேற்பட்ட நச்சு ரசாயனங்களில் கலவை பயன்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக மார்பக புற்றுநோய் மற்றும் மலட்டுத் தன்மைக்கு பெண்கள் உள்ளாகும் அபாயம் உள்ளது.

பக்க விளைவுகள் ஆபத்து
தற்கால இளம்பெண்கள் விரும்பும் மார்பக வளர்ச்சி, முகமாற்று அறுவை சிகிச்சை போன்ற முறைகளிலும் அதிக ஆபத்து உள்ளது. இவ்வகை பிளாஸ்டிக் சிகிச்சைகளினால் விரைவில் முதுமை எய்துதல், முகச் சுருக்கம், நீரிழிவு நோய், மருந்து மாத்திரைகளின் சக்தியை கிரகித்துக் கொள்ள முடியாத இயல்பு போன்ற பக்க விளைவுகளும் ஏற்படலாம் என அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications