முனைவர் மு. இளங்கோவனின் நூல்கள் இன்று வெளியீடு
புதுச்சேரி: முனைவர் மு.இளங்கோவனின் செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல், கட்டுரைக் களஞ்சியம் நூல்களின் வெளியீடு, புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் இன்று மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணிவரை நடைபெற உள்ளது.
புதுச்சேரி சட்டப் சபை சபாநாயகர் வ. சபாபதி (எ) கோதண்டராமன், புதுச்சேரி அரசின் மின்துறை, கல்வித்துறை அமைச்சர் தி.தியாகராசன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழகம், புதுவையைச் சேர்ந்த தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வுமாணவர்கள், மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் திரளாகக் கலந்துகொள்ள உள்ளனர்.
புதுவை மாநிலத்தின் தமிழ்த்தாய் வாழ்த்து ஆண்டிராய்டில் வழங்கும் நிகழ்வும், நடவுப்பாடல்கள் ஒளிவட்டு வெளியீடும், பாவேந்தரின் முதல்பதிப்புகள் மின்பதிப்புகளாக வழங்கும் நிகழ்வும் நடைபெற உள்ளன.
தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொள்ளலாம். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைப் புதுச்சேரி இலக்கிய வட்டத்தினர் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications