துபாய் ஈமான் அமைப்பு நடத்திய மீலாது பெருவிழா

துவக்கமாக விழாக்குழு இணைச் செயலாளர் முஹைதீன் அப்துல் காதர் இறைவசனங்களை ஓதினார். ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹுத்தீன் தலைமை வகித்தார். கல்விக்குழுத் தலைவரும், துணைத் தலைவருமான அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லாஹ் முன்னிலை வகித்தார்.
பொதுச் செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார். துணைப் பொதுச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா துவக்கவுரை நிகழ்த்தினார். நபிகளாரின் சிறப்புகள் குறித்து கோட்டாறு சாதிக் சிற்றுரை வழங்கினார்.
தாயகத்திலிருந்து வந்திருந்த மீலாது விழா சிறப்புப் பேச்சாளர் தென்காசி ஜாமிஆ அல்தாபுர் ரப்பானியா அரபிக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் எம்.ஹெச். ஷம்சுதீன் உலவி விழாப் பேருரை நிகழ்த்தினார். மீலாது பெருவிழா கொண்டாட வேண்டியதன் அவசியம் குறித்தும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் புகழ்வதன் இன்றியமையாமை குறித்தும் விவரித்தார்.
ஈமான் அமைப்பு நடத்திய மீலாது பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்ற பெனாசிர் ஃபாத்திமா, இரண்டாம் இடம் பெற்ற ஜெஸிலா ரியாஸ், மூன்றாம் இடம் பெற்ற ரஸீன் ஆகியோருக்கு அல்ஹாஜ் செய்யது எம். ஸலாஹுத்தீன் மற்றும் துணைத் தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லாஹ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
அடமங்குடி அப்துல் ரஹ்மான் இறையருட்பா பாடினார். விழாக்குழு செயலாளர் கீழை ஹமீது யாசின் நன்றி கூறினார். துணைப் பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதுவை ஹிதாயத், கீழை யாசின், முஹைதீன், ஜமால், சாதிக், காதர், சாகுல் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications