துபாய் உள்ளிட்ட வளைகுடாவின் பல்வேறு பகுதிகளில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் உள்ளிட்ட வளைகுடாவின் பல்வேறு பகுதிகளில் இன்று ஈகைத் திருநாள் கொண்டாடப்படுகிறது.
ஷவ்வால் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, குவைத், ஜோர்டான், பாலஸ்தீனம், கத்தார் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இன்று ஈகைத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

ஷவ்வால் பிறை தென்படாததையடுத்து ஓமன் நாட்டில் வெள்ளிக்கிழமை ஈகைத் திருநாள் கொண்டாடப்படும். இதே நாளன்று இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் ஈகைத் திருநாள் கொண்டாடப்படும்.
ஜப்பானில் இன்று ஈகைத் திருநாள் கொண்டாடப்படுகிறது.












Click it and Unblock the Notifications