துபாயில் இந்திய சுற்றுலாத்துறை குறித்த சிறப்பு நிகழ்ச்சி
துபாய்: துபாயில் இந்திய சுற்றுலாத்துறை குறித்த சிறப்பு நிகழ்ச்சி 07.05.2013 அன்று மாலை துபாய் மாலில் அமைந்துள்ள தி அட்ரஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்திய சுற்றுலாவின் மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் பிராந்திய டைரக்டர் விகாஸ் ருஸ்டகி தலைமை வகித்தார். நிகழ்ச்சயில் இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா, இந்திய சுற்றுலா அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் கிரிஷ் சங்கர், ஜம்மு காஷ்மீர் மாநில சுற்றுலா அமைச்சர் குலாம் அஹமது மீர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
கிரிஷ் சங்கர் தனது உரையில், வருடந்தோறும் வளைகுடாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக அமீரக மக்கள் மிகவும் அதிக அளவில் வருவது குறிப்பிடத்தக்கது என்றார்.
அமைச்சர் குலாம் அஹமது மீர் தனது உரையில், ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள சுற்றுலாத் தளங்களுக்கு அனைவரும் வருகை தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இயற்கையுடன் கூடிய இப்பகுதிகள் இறைவனின் அருட்கொடை எனக் குறிப்பிட்டார்.
இந்திய பாரம்பர்யத்தை விளக்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருக்கு ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் அதிர்ஷ்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பல்வேறு மாநில சுற்றுலாத்துறை அதிகாரிகள், தேரா டிராவல்ஸ் மேலாண்மை இயக்குநர் கே.கே.எம். ஹனீஃப், பொது மேலாளர் டி.பி. சுதீஷ், மேலாளர் ஹாஜா மொஹைதீன், ஆரிஃபா குருப்பின் மேலாளர் ஹமீது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ...










-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications