துபாயில் அமீரகத் தமிழ் மன்றம் நடத்திய "இந்த நாள் இனிய நாள்"

இந்த ஒன்று கூடல் நிகழ்ச்சியில் உறுப்பினர்கள், விருந்தினர்கள், குழந்தைகள் என்று சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். துபாய் மற்றும் ஷார்ஜா நகரங்களில் வசிப்பவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வசதியாக சிறப்புப் பேருந்துகளுக்கு விழாக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். காலையில் உறுப்பினர்கள் பதிவு மற்றும் சிற்றுண்டியுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும், பல்வேறு வயது பிரிவுகளில் குழந்தைகளுக்காகவும் பல்வேறு சுவாரஸ்யமான விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.
போட்டிகளில் வயது வித்தியாசமின்றி அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். மூன்று வயது குழந்தைகளுக்காகவும் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மதிய உணவிற்குப் பின் ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்ட பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உடனடியான தலைப்புகளில் எவ்விதத் தயாரிப்புமின்றி ஒரு நிமிடம் பேசும் போட்டியில் ஆண்களுக்கிணையாகப் பெண்களும் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
ஆங்கில சொற்களுக்கான தமிழ்க் கலைச்சொல்லைக் கண்டுபிடிக்கும் போட்டி புதிய கலைச்சொற்களை உறுப்பினர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருந்தது. தனி நபர் திறமையை வெளிப்படுத்தும் போட்டிகளிலும் ஆண்களும் பெண்களும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளியான ஆகாஷ் என்ற சிறுவனும் உற்சாகத்துடன் கலந்து கொண்டது உறுப்பினர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
அமைப்பின் தலைவர் காமராசன், செயலாளர் ஜெஸிலா ரியாஸ், கலைச் செயலாளர் ஃபாரூக் அலியார், பொருளாளர் நஜ்முதீன், இணைச் செயலாளர் இரமணி, ஆலோசகர்கள் அகமது முகைதீன், ஆசிப் மீரான் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரியாஸ் அகமது, அமீரா அமீன், பர்வீன் ஃபாத்திமா, மகேஷ் ஆனந்த், தௌலா, சரவணன் ஆகியோர் செய்திருந்தனர். பரிசளிப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் தேநீருடன் விழா இனிதே நிறைவடைந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications