துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் இஃப்தார் நிகழ்ச்சி
துபாய்: துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் 12.07.2013 அன்று மாலை லேண்ட்மார்க் ரிக்கா ஹோட்டலில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
துவக்கமாக தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ஜாபர் சாதிக் இறைவசனங்களை ஓதினார். ஜமாஅத் தலைவர் ஹெச். இப்னு சிக்கந்தர் தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில், கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளுக்கு உதவி வரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். ஆலோசகர் சம்சுதீன் முன்னிலை வகித்தார்.
பொதுச் செயலாளர் முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், ஜமாத்தின் சார்பில் தாயகத்தில் நடைபெற்று வரும் தனிப்பயிற்சி வகுப்பில் படித்த 10ம் வகுப்பு மாணாக்கர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற தகவலையும், 10க்கும் மேற்பட்டோர் 400க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்ற விபரத்தினையும் தெரிவித்தார்.

சிறப்பு விருந்தினர் மௌலவி கலீல் ரஹ்மான் பிலாலிக்கு கனியின் தகப்பனார் நினைவுப் பரிசு வழங்கினார். மௌலவி கலீல் ரஹ்மான் தனது சிறப்புரையில், பொதுசேவையில் ஈடுபட வேண்டியதன் அவசியம் குறித்தும், அப்பணிகளில் ஈடுபடுவோருக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டியது குறித்தும் எடுத்துரைத்தார்.
பொருளாளர் ஏ. ஜஹாங்கீர் நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துணை பொதுச்செயலாளர் ஹபிப் திவான் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications